முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சிக்கன் ரோல்

Cooking time in minutes: 
20
Ingredients: 

சிக்கன் ரோல் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. போன்லெஸ் சிக்கன் - 600 கிராம்.
  2. மிளகுதூள் - ஒரு ஸ்பூன்.
  3. கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
  4. சீஸ் – 100 கிராம்.
  5. கார்ன் பிளவர் மாவு  - 100 கிராம்.
  6. எண்ணெய் - 2 கரண்டி.
  7. உப்பு - சிறிதளவு.
Method: 

செய்முறை ;--

  1. வெஜிடபிள் நறுக்கும் பலகையில் நீளமாக நறுக்கிய 600 கிராம் போன்லெஸ் சிக்கனை எடுத்துக்கொள்ளவும்.
  2. சிக்கன் துண்டின் மேல் ஒரு பாலீத்தின் கவரை போட்டு மூடி மரக்கரண்டியை வைத்து சிக்கனை தட்டி நன்றாக நசுக்கி வைத்துக்கொள்ளவும்.
  3. மேலே உள்ள கவரை எடுத்து விட்டு சிக்கன் துண்டில் சிறிதளவு உப்பை தூவிக்கொள்ளவும்.
  4. இதனுடன் ஒரு ஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் ஒரு ஸ்பூன் கரம் மசாலாவை தூவிக்கொள்ளவும்.
  5. நீளமாக நறுக்கிய 2 சீஸ் துண்டை எடுத்து சிக்கனின் நடுவில் வைத்து இருபுறமும் மூடி தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  6. ஒரு தட்டில் 100 கிராம் கார்ன் பிளவர் மாவை எடுத்துக்கொள்ளவும்.
  7. சுருட்டி வைத்துள்ள சிக்கன் துண்டினை எடுத்து கார்ன் பிளவர் மாவில் போட்டு பிரட்டி எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
  8. அடுப்பில் கடாயை வைத்து 2 கரண்டி எண்ணெய்யை ஊற்றவும்.
  9. எண்ணெய்  சூடானவுடன்  கார்ன் பிளவர் மாவில் போட்டு பிரட்டி எடுத்து வைத்துள்ள  சிக்கனை எண்ணெயில் போட்டு வேக விடவும். 
  10. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக விடவும். 
  11. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  12. சுவையான சிக்கன் ரோல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 day 18 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 day ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 day ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 day ago