முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்தையில் கீரை விலை கேட்பதால் பொருளாதார பிரச்சினை தீராது : ப.சிதம்பரம் விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 9 அக்டோபர் 2022      தமிழகம்
Chidambaram 2022--10-09

Source: provided

திருப்பூர் : நாட்டின் நிதியமைச்சர் மயிலாப்பூருக்குச் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை விலை என்ன? என்று கேட்டால் விலைவாசி பிரச்சினைக்கு தீர்வு கிட்டாது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் குட்டப்பாளையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 

கொங்கு பகுதியில் காங்கேயம் மாடுகளை பல விவசாயிகள் வளர்ப்பதற்கும், பால் உற்பத்தியை பெருக்குவதற்கும் இன்னும் தமிழக அரசு ஊக்கம் தரம் வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணம். சென்னை மயிலாப்பூரில் சென்று நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை விலை என்ன? என்று கேட்பது மட்டும் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாகாது. 

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வெற்றிப் பயணம். இந்த யாத்திரை அவரவர் வீடுகளில் முடங்கிக் கிடந்த காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் அபிமானிகளை வீட்டை விட்டு வெளியில் வர வைத்துள்ளது. இந்த யாத்திரைக்கு மேலும் மேலும் பலம் கூடும், பலம் குறையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 10 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 days ago
View all comments

வாசகர் கருத்து