முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்லுமா இந்தியா? - இறுதிப்போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்

வெள்ளிக்கிழமை, 28 ஜூன் 2024      விளையாட்டு
INDIA 2024-06-28

Source: provided

பிரிட்ஜ்டவுன் : டி-20 உலகக்கோப்பையை 2 முறை வெல்லுமா இந்திய அணி என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ள நிலையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி எதிர்கொள்கிறது.

20 நாடுகள் பங்கேற்பு...

20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றன. அவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் சூப்பர்-8 சுற்றுக்கு இந்தியா, அமெரிக்கா (குரூப் ஏ) ஆஸ்திரேலியா, இங்கிலாந்து (பி), ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் (சி), தென் ஆப்பிரிக்கா, வங்காளதேசம் (டி) ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

இரண்டு பிரிவுகளாக...

முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தான், இலங்கை மற்றும் நியூசிலாந்து, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புவா நியூ கினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன. சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்ற 8 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்காளதேசமும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்காவும் இடம் பெற்றன.

இன்று இரவு இறுதி...

இதன் முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. முதல் அரை இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது. 2-வது அரைஇறுதியில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை தோற்கடித்தது. கோப்பைக்கான இறுதிப்போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

3-வது முறையாக...

இந்தியா 3-வது முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 2007-ம் ஆண்டு நடந்த முதல் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2014-ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா, இலங்கையிடம் தோற்றது. இந்திய அணி 2-வது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. பேட்டிங், பந்து வீச்சில் சம பலத்துடன் உள்ள இந்தியா, சாம்பியன் பட்டத்தை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயத்தில் கோலி...

பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (248 ரன்), சூர்யகுமார் யாதவ் (196 ரன்), ரிஷப் பண்ட் (171 ரன்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்ரவுண்டர் ஹர்த்திக் பாண்ட்யா (139 ரன், 8 விக்கெட்) அசத்தி வருகிறார். கோலி 7 ஆட் டத்தில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளார். அவர் ரன் குவிக்கும் கட்டாயத்தில் உள்ளார். அதேபோல் ஷிவம் துபே அதிரடியாக விளையாட வேண்டும். பந்து வீச்சில் அர்ஷ்தீப்சிங் (15 விக்கெட்), பும்ரா (13 விக்கெட்), குல்தீப் யாதவ் (10 விக்கெட்), அக்சர் பட்டேல் (8 விக்கெட்) ஆகியோர் உள்ளனர். 

வெல்லும் ஆர்வம்....

மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அந்த அணி சாம்பியன் பட்டம் வென்று நீண்ட நாள் உலக கோப்பை தாகத்தை தீர்க்கும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங்கில் டி காக் (204 ரன்), டேவிட் மில்லர் (148 ரன்), கிளாசன் (138 ரன்), ஸ்டப்ஸ் (134 ரன்), மார்க்ரம் (119 ரன்), ஹென்ட்ரிக்ஸ் (109 ரன்) ஆகியோர் உள்ளனர். பந்து வீச்சில் நோக்கியா (13 விக்கெட், ரபடா (12 விக்கெட்), ஷம்சி (11 விக் கெட்), மகராஜ் (9 விக்கெட்) ஆகியோர் உள்ளனர்.

விறுவிறுப்பாக... 

இந்த தொடரில் இரு அணிகளும் தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தன. இந்தியா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தென்ஆப்பிரிக்கா சில ஆட்டங்களில் போராடியே வெற்றி பெற்றது. அதே வேளையில் கோப்பைக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

பார்படாஸ் சென்றது...

கோப்பைக்கான இறுதிப் போட்டி பிரிட்ஜ்டவுனில் இன்று நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிபோட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பார்படாஸ் சென்றடைந்தது. 

இதுவே முதல் முறை...

நடப்பு தொடரில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகள் விளையாடிய எந்த ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா விளையாடிய 8 ஆட்டங்களிலும் ( லீக் 4, சூப்பர் 8 சுற்று 3, அரையிறுதி1) வெற்றி பெற்றுள்ளது. அதேவேளை இந்திய அணி விளையாடிய 7 ஆட்டங்களிலும் ( லீக் 3, சூப்பர் 8 சுற்று 3, அரையிறுதி 1) வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு சீசனில் தோல்வியே சந்திக்காத அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது இதுவே முதல் முறையாகும். இந்த மாபெரும் வரலாற்று சாதனையுடன் இவ்விரு அணிகளும் இன்று மோத உள்ளன.

ரிசர்வ் டே உண்டா..?

கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடரின் சாம்பியன் யார்? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இன்று இந்தியா - தென் ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த ஆட்டம் பார்படாஸ் நகரில் நடைபெற உள்ளது. நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் மழையால் ஆட்டம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிறைய ஆட்டங்களின் இடையே மழை குறுக்கிட்டு ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து ஆட்டமும் 1 மணி நேரம் மழையால் பாதிக்கபட்டது. இந்நிலையில் இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டால், நாளை (30-ம் தேதி) ரிசர்வ் டே நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து