முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது 3 குற்றவியல் சட்டங்கள் : சாலையோர வியாபாரி மீது முதல் வழக்குப்பதிவு

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      இந்தியா
Cort 2023 04 17

Source: provided

புதுடெல்லி : நாடு முழுவதும் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தநிலையில், இந்த புதிய சட்டத்தின் கீழ் டெல்லியில் சாலையோர வியாபாரி மீது முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பழங்கால ஆங்கில ஆட்சியில் உருவாக்கப்பட்ட பழம் பெரும் கிரிமினில் சட்டங்கள் நீக்கப்பட்டு புதிய 3 கிரிமினல் சட்டங்கள் நேற்று (ஜூலை-1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. பாதிக்கப்பட்டோருக்கு விரைவில் உரிய நீதி கிடைக்க வழிவகை செய்யும் இந்த புதிய சட்டங்கள். கடந்த டிச-21 ல் பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் (பி.எஸ்.ஏ.,) ஆகியன உருவாக்கப்பட்டன. பெண்கள் மீதான தாக்குதல், குழந்தைகள் தொடர்பான குற்றப்புகார்கள், வயது மூத்தவர்கள் பாதிப்புக்கு உரிய நீதி கிடைக்க வழி செய்யும் .

தேச துரோகம் என்ற பிரிவு நீக்கப்பட்டு, பிரிவினைவாதம், கிளர்ச்சி, இறையாண்மைக்கு ஊறுவிளைவித்தல், ஒற்றுமைக்கு எதிரான செயல் என சேர்க்கபட்டு தண்டனை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் மின்னஞ்சல் மூலம் புகார் பதிய முடியும். மேலும் இதற்கான எப்ஐஆர் நகல் பாதிக்கப்பட்டோர் டிஜிட்டல் மூலம் பெற்று கொள்ள வழி செய்யும். பாதிப்புக்குள்ளானவர்கள் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டியது இருக்காது. தேவைப்படும் போது சென்றால் போதுமானது. பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை அதிகாரி விரைந்து நேரில் சென்று உரிய காலத்திற்குள் அறிக்கை மற்றும் குற்றச்சாட்டுக்களை பதிய வேண்டும். மின்அஞ்சல் மூலம் சம்மன் அனுப்ப முடியும். கைது செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் உடனுக்குடன் நெருங்கி உறவினர்களுக்கு தெரிவிக்கப்படும். பாதிக்கபட்டோருக்கு உரிய விரைவான சிகிச்சை அளிக்கப்படும்.

வீண் வாய்தாக்கள் இருக்காது, 14 நாட்களுக்குள் எப்ஐஆர், 2 மாதங்களில் விசாரணை முடிப்பு, 90 நாட்களில் பாதிக்கப்பட்டோருக்கு முழு விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் பெற முடியும். 60 நாட்களுக்குள் குற்றச்சாட்டுக்கள் வரையப்பட வேண்டும், விசாரணை முடிந்து 45 நாட்களுக்கு மிகாமல் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு கூடுதல் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும். பாதிக்கப்படுவோர் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் மின்னணு அளிக்கலாம் . போலீஸ் எல்லை பிரச்சனை குறையும். காகித ஆவணங்கள் குறையும். வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரிக்கப்படலாம். இது போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்ட இந்த சட்டங்கள் நேற்று (ஜூலை1 ) முதல் அமலுக்கு வந்தது. நீதி துறை , போலீஸ், பிரிவினருக்கு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 17,500 போலீஸ் ஸ்டேஷன்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதற்கிடையே புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் 2023-ன் கீழ் தில்லி கம்லா மார்க்கெட் காவல் நிலையத்தில் சாலையோர வியாபாரியின் மீது முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தில்லி ரயில் நிலையத்தின் நடை மேம்பாலத்தின் கீழ் இடையூறு விளைவிக்கும் வகையில் கடை வைத்திருந்ததாக குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சம்ஹிதா பிரிவு 285ன் கீழ் அவர் மீது வழக்குப் பதி்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் படி குற்றவாளியின் பெயர் பங்கஜ் குமார் என்றும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து