முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிட்டாரில் ராக் இசையமைத்து அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்திய இந்திய சிறுமி

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      உலகம்
America 2024-07-01

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் பிரபல டி.வி. நிகழ்ச்சியில் கிட்டாரில் ராக் இசையமைத்து அமெரிக்கர்களை இந்திய சிறுமியான மாயா நீலகண்டனம் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இந்தியாவை சேர்ந்த 10 வயது கிட்டார் இசை கலைஞரான மாயா நீலகண்டன், அமெரிக்காவில், திறமைகளை வெளிப்படுத்தும் டி.வி. நிகழ்ச்சியான அமெரிக்காஸ் காட் டேலண்ட் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் கிட்டாரில் ராக் இசையமைத்து அமெரிக்கர்களை வியப்பில் ஆழ்த்தினர். 

அவரது கிட்டார் வாசிப்பு திறமை மற்றும் பாவனைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அவர் பாடும் இசை வீடியோக்கள்   வலைதளங்களில் வைரலாக பரவியது. 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பார்வையிட்டு உள்ளனர். 

இசை பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் அவரை வாழ்த்தி கருத்து பதிவிட்டுள்ளனர். மாயா நீலகண்டன் வீடியோவை பகிர்ந்துள்ள ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- 

கடவுளே... மாயா நீலகண்டனுக்கு 10 வயதுதான் ஆகிறது. ஆம். சைமன். அவள் ஒரு தெய்வம் தான். தேவதைகளின் தேசத்திலிருந்து வந்திருக்கிறாள்.. நாங்கள் மாயா நீலகண்டனுக்கு தேவையானதை செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியுள்ளார்.   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து