முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் பிரச்சினை: மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
Appavu 2023-09-12

Source: provided

நெல்லை : இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினை குறித்து மத்திய அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி உள்ளார். 

நெல்லை மாவட்டம் கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக நேற்று தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

கொடுமுடியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் மூலமாக நாங்குநேரி, ராதாபுரம் வட்டத்தில் சுமார் 16 கிராம மக்கள் பயன் அடைவார்கள். விவசாயிகள் சிக்கனமாக தண்ணீரை செலவழித்து நல்ல முறையில் கார் பருவ சாகுபடி செய்ய வேண்டும்.

இலங்கை அரசு நாட்டுப்படகில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களையும், அவர்களது படகுகளையும் சிறைபிடித்துள்ளனர். இந்தியா வலுவான கட்டமைப்பு உள்ள நாடு. ஆனால் இலங்கை போன்ற சிறுநாடுகள் இந்திய மீனவர்களை அடிக்கடி கைது செய்து வரும் சம்பவம் தொடர்ந்து வருகிறது.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியும், மத்திய அரசும், பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் அதனை பொருட்டாக எடுக்காமல், அந்த கோரிக்கையை பரிசீலனை கூட செய்வது இல்லை. 10 ஆண்டு காலமாக இதே நிலை தான் நீடித்து வருகிறது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருப்பவர் தமிழகத்தை சேர்ந்தவர் தான். அவர் மீனவர்களையும், மீன்வளத்துறை அதிகாரிகளையும், இலங்கை அரசின் அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். 

இதற்கு முன்பு கச்சத்தீவை தாண்டி சென்றால் தான் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கைது செய்யும். மேலும் வழக்கமாக நாட்டுப் படகை பிடிக்க மாட்டார்கள். ஆனால் தற்போது அதனையும் சிறை பிடிக்கின்றனர் என்றால், மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து