முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. கைது செய்ததை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      இந்தியா
Kejriwal 2023 04 14

Source: provided

புதுடெல்லி : கலால் கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. கைது செய்ததை எதிர்த்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டு, ஜூன் 2-ம் தேதி மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்க இயக்குநரகம் தாக்கல் செய்த பணமோசடி வழக்கில் நீதிமன்றக் காவலில் இருந்த கெஜ்ரிவாலை ஜூன் 26ஆம் தேதி திகார் சிறையில் இருந்து சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு, மூன்று நாள் காவலில் வைக்கப்பட்டார்.

ஜூலை 29 அன்று சி.பி.ஐ. தரப்பில், கெஜ்ரிவால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க சி.பி.ஐ. தரப்பில் அனுமதி கோரப்பட்டது. சி.பி.ஐ. தரப்பு மனு மீதான விசாரணையில் உத்தரவு பிறப்பிக்காமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த நிலையில், கெஜ்ரிவாலுக்கு 3 நாள் சி.பி.ஐ. காவல் வழங்கப்பட்டது. பின்னர் சி.பி.ஐ. காவல் முடிந்து ஆஜர்படுத்தப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12 வரை நீதிமன்றக் காவல் வழங்கி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே சி.பி.ஐ.யின் கைதை எதிர்த்து கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து