முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்து சேவை : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
CM-1 2024-07-01

Source: provided

சென்னை : சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின்,  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளின் சேவையினை  கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சுற்றுலா பயண திட்டங்களை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் குளிர்சாதன வசதியுடன் கூடிய வால்வோ சொகுசு பேருந்துகள், அதிநவீன சொகுசு பேருந்துகள், சாதாரண சொகுசு பேருந்துகள், 18 இருக்கைகளுடன் கூடிய சிறிய ரக சொகுசு பேருந்துகள் என மொத்தம் 15 சொகுசு பேருந்துகளை இயக்கி வருகிறது. இந்த சுற்றுலா பேருந்துகள் மூலமாக 7.5.2021 முதல் 31.5.2024 வரை 3,03,721 நபர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டங்களின் கீழ் சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த நிலையில்  தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பேருந்துகள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட ஒரு பேருந்து என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொடியசைத்து  தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்துகளில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலா பயணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி, மிதவை அமைப்பு வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய ஜி.பி.எஸ். கருவி, ஒய்பை  வசதி, ஒவ்வொரு இருக்கையிலும் போன் சார்ஜ் செய்யும் வசதி, 35  பயணிகளும் நீண்ட நாள் பயணத்திற்கான தங்கள் பொருட்களை தாராளமாக வைத்துக் கொள்ள மிகப்பெரிய அளவிலான பொருட்கள் வைப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில்,  அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின்,  ராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர்   டாக்டர் க. மணிவாசன் , சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர்  சமயமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து