முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம்

திங்கட்கிழமை, 1 ஜூலை 2024      தமிழகம்
Metro 2024-05-31

Source: provided

சென்னை : ஜூன் மாதத்தில் 84.33 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இது குறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 01.05.2024 முதல் 30.05.2024 வரை மொத்தம் 84,21,072 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 21.06.2024 அன்று 3,27,110 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

 ஜூன் மாதத்தில் மட்டும் கியூஆர் குறியீடு  பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 37,05,316 பயணிகள்,  பயண அட்டைகளை பயன்படுத்தி 31,33,011 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 30,752 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 3,757 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை  பயன்படுத்தி 15,61,001 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு  பயணச்சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்அப் டிக்கெட், பே டிஎம் ஆப் மற்றும் போன் பே  போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20 சதவீத கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது. 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் பேடிஎம் ஆப் மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம். மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி. இவ்வாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 22 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 days 23 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 6 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 6 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து