முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாலத்தீவில் பரபரப்பு: அதிபருக்கு சூனியம் வைத்ததாக அமைச்சர்கள் உள்பட 4 பேர் கைது

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      உலகம்
Maldives 2024-05-07

Source: provided

மாலி : மாலத்தீவு அதிபர் மொகம்மது மூயிஸ்ஸுக்கு சூன்யம் வைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ், மாலத்தீவு அமைச்சர்கள் இரண்டு பேர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மாலத்தீவில், மிகப்பெரிய பதவியில் இருப்பவர்களுக்கு சூன்யம் வைத்ததாக இரண்டு அமைச்சர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜூன் 23ஆம் தேதி மாலத்தீவின் அமைச்சர்கள் ஃபாத்திமா ஷம்நாஸ் அலி சலீம், ஆதம் ரமீஸ் ஆலி ஆகியோருடன், வேறு இரண்டு பேரையும் மாலத்தீவு காவல்துறை கைது செய்தது. இவர்கள் மீது அதிபருக்கு சூனியம் வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மாலத்தீவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் ஃபாத்திமா ஷம்நாஸ் அலி சலீம், இவரது முன்னாள் கணவர் ஆதம் ரமீஸ் அதிபர் அலுவலக விவகாரத் துறை அமைச்சராக உள்ளார். இவர்கள் இருவரும்தான் தற்போது கைதாகியிருக்கிறார்கள். பில்லி-சூனியம் தொடர்பான சில நடவடிக்கைகள் அதிபர் அலுவலகத்தில் காணப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்த விதமான தடயங்களை அடிப்படையாக வைத்து சூனியம் வைக்கப்பட்டதாக நிரூபிக்கப்பட்டது என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிட காவல்துறை மறுத்துவிட்டது. ஆனால், இந்த செய்தி உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.

மாலத்தீவு அரசியல் வட்டாரத்தில், கைது செய்யப்பட்டிருக்கும் இரு அமைச்சர்களுமே மிகவும் முக்கியமானவர்கள், ஏற்கனவே மாலேவின் மேயராக மொகம்மது மூயிஸ் பதவி வகித்தபோது, ஃபாத்திமா உடன் பணியாற்றியிருக்கிறார். பிறகு, மொகம்மது மூயிஸ் தேர்தலில் வெற்றி பெற்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவு அதிபரான போது ஃபாத்திமா, சுற்றுச்சூழல் அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார்.

மேலும், மொகம்மது மூயிஸ்-க்கு நெருங்கிய உதவியாளராக ஆதம் ரமீஷ் இருந்து வந்துள்ளார். ஆனால், கடந்த ஐந்து மாதங்களாக, மொகம்மது பங்கேற்ற பொது நிகழ்ச்சிகள் எதிலும் ஆதம் பங்கேற்காமல் இருந்தது, அரசியல் பார்வையாளர்களால் கவனிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில்தான் இவர்கள் இருவரும் கைதாகியிருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து