முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர் பட்டாசு ஆலை விபத்துகள்: அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்

சனிக்கிழமை, 29 ஜூன் 2024      தமிழகம்
OPS 2023-10-25

Source: provided

சென்னை : பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதை தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆராய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள், கள்ளச்சாராயத்தினால் உயிரிழப்புகள், பாலியல் துன்புறுத்தல் காரணமாக தற்கொலைகள், கால்நடைகளால் உயிரிழப்புகள், சமூக விரோதிகளால் உயிரிழப்புகள், ஆணவக் கொலைகளால் உயிரிழப்புகள், சிலிண்டர் வெடிப்பு காரணமாக உயிரிழப்புகள் என மனித உயிரிழப்புகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடைபெற்று வருகின்றன. இதுதான் தி.மு.க. அரசின் மூன்றாண்டு சாதனை. 

பட்டாசு தொழிற்சாலைகளில் வெடி விபத்து என்பது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இந்த வெடி விபத்துகள் எல்லாம் இரசாயனக் கலவையின்போது ஏற்படுகின்றன. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அத்தனை பட்டாசு தொழிற்சாலைகளிலும், இரசாயனக் கலவைகள் மேற்கொள்ளும் இடத்தில் தகுதி வாய்ந்தோர் இருக்கிறார்களா? பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுகின்றனவா? என்பதையெல்லாம் தொழிலகப் பாதுகாப்பு அதிகாரிகள் அவ்வப்போது ஆராய வேண்டும்.

ஆனால், இது போன்ற ஆய்வுகள் அவ்வப்போது நடைபெறுவதில்லை என்றும், போதுமான அதிகாரிகள் இல்லை என்றும் தகவல்கள் வருகின்றன. இது குறித்து நானும் பல அறிக்கைகள் மூலமாக தி.மு.க. அரசை வலியுறுத்தி வருகிறேன். இருப்பினும், எந்த ஆய்வுகளும் முறையாக நடைபெறாததன் காரணமாக, இதுபோன்ற விபத்து அடிக்கடி நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது.

பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் விபத்துகளை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையினை முதல்வர் எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்வதோடு, உயிரைப் பணயம் வைத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 1 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 days 22 min ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து