முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹத்ராஸ் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் டெல்லியில் கைது : உ.பி. போலீசார் தகவல்

சனிக்கிழமை, 6 ஜூலை 2024      இந்தியா
Jaill 20221 01 04

Source: provided

நொய்டா : ஹத்ராஸ் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான தேவபிரகாஷ் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் உ.பி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அந்த நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள். 

இந்த சம்பவம் தொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீசார் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105 மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.ஆனால், ஆன்மிக சொற்பொழிவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகர் என்பவர் இன்னும் தலைமறைவாக உள்ளார். 

அவரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருவதாக மாநில அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் தேவபிரகாஷ் பற்றி துப்பு அளிப்போருக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு வழங்குவதாக உ.பி போலீசார் அறிவித்திருந்தனர். 

இந்நிலையில், தலைமறைவான தேவபிரகாஷ் டெல்லியின் உத்தம்நகரின் நஜப்கரின் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உ.பி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால்,  நேற்று முன்தினம் நள்ளிரவு அங்கு சென்ற போலீசார் தேவபிரகாஷை கைது செய்தனர். 

அப்போது அவரே முன்வந்து சரணடைந்ததாகவும் கூறப்படுகிறது. முக்கியக் குற்றவாளியான தேவபிரகாசை உ.பி. போலீசார் ஹத்ராசுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தி வருகிறனர்.  

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 week 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து