முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி தீவிர ஆலோசனை

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      இந்தியா
Modi-1 2023 04 03

 புது டெல்லி, வரும் 23-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

நடப்பு, 2024 - 2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 22-ம் தேதி துவங்கி ஆகஸ்ட், 12-ம் தேதி வரை நடக்க உள்ளதாக, மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்து உள்ளார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, வரும் 23-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து, ஏழாவது முறையாக அவர் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், நேற்று  பட்ஜெட்டில் இடம்பெற உள்ள, முக்கிய அம்சங்கள் குறித்து பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் உடனிருந்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக மோடி பிரதமரான பின், தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து