முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிட சிறப்பு விடுமுறை: அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு சலுகை

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      இந்தியா
Assam-CM-2024-07-11

திஸ்பூர், அசாம் அரசு தனது ஊழியர்கள் தங்களது பெற்றோர் அல்லது மாமியார் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுவதற்காக வரும் நவம்பர் மாதம் இரண்டு நாட்கள் சிறப்பு சாதாரண விடுப்பு அறிவித்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும், இந்த சிறப்பு விடுப்பு ஊழியர்கள் தங்களின் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காகவோ பயன்படுத்த முடியாது என்றும், அல்லது பெற்றோர், மாமியார் இல்லாதவர்கள் இந்த விடுப்புகளைப் பெறத் தகுதியற்றவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து முதல்வர்  அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அசாம் முதல்வர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா தலைமையில், 2024-ம் ஆண்டு நவம்பர் 6 மற்றும் 8-ம் தேதிகளில் மாநில அரசு ஊழியர்களுக்கு அவர்களின் பெற்றோர் அல்லது மாமனார்,  மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்காக சிறப்பு தற்செயல் விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடுப்பு வயதான பெற்றோர் அல்லது மாமனார், மாமியாருடன் நேரத்தை செலவிடுவதற்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அவர்களை கவுரவப்படுத்தவும், மதிக்கவும், பராமரிக்கவும், தனிப்பட்ட மட்டுமே தவிர தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக அல்ல என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் நவம்பர் 7-ம் தேதி சத் பூஜை விடுமுறை, நவம்பர் 9-ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் நவம்பர் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறையுடன் சிறப்பு விடுப்பை பெறலாம் என்று முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் படிப்படியாக இதைப் பெறலாம் என்றும், பெற்றோர் அல்லது மாமியார் இல்லாதவர்கள் அதற்குத் தகுதி பெற மாட்டார்கள் என்றும் முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அரசு ஊழியர்களுக்கு பெற்றோர் மற்றும் மாமியார்களுடன் நேரத்தை செலவிட இரண்டு சிறப்பு சாதாரண விடுப்புகளை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா 2021-ல் பதவியேற்ற பிறகு தனது முதல் சுதந்திர தின உரையில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து