முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் வெள்ள பாதிப்பு பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார் முதல்வர் யோகி

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      இந்தியா
Yogi-Adityanath-2024-07-11

லக்னோ,  உத்தர பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கால் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் யோகி ஆதித்யாநாத் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூர், ஷ்ரவஸ்தி, பஸ்தி, கோரக்பூர், பல்லியா மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இங்குள்ள ரப்தி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்ராம்பூர், துளசிபூர், உத்ராலா ஆகிய பகுதிகளில் உள்ள 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

பல்ராம்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், நேபாளத்தில் இருந்து கீழ்நோக்கி வரும் நீர் வரத்து காரணமாகவும், ரப்தி ஆற்றில் வெள்ளம் அபாயக் கட்டத்தைக் கடந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். எனினும், வெள்ளத்தில் மூழ்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நேற்று பல்ராம்பூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். இதே போல், ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளையும் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார்.

பின்னர், ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம் ஒன்றுக்கு வருகை தந்த யோகி ஆதித்யாநாத், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நலம் விசாரித்தார். ​​அவர்களுக்கு உதவித் தொகைக்கான காசோலைகள் மற்றும் நிவாரணப் பொருள்களை முதல்வர் வழங்கினார்.

இதேபோல், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்ற முதல்வர், பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். ​​பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவித் தொகை மற்றும் நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 

வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு சுறுசுறுப்புடனும், உணர்வுடனும் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வெள்ளத்தை எதிர்கொள்ளும் ஒவ்வொரு குடிமகனின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே எங்கள் முன்னுரிமை. பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உதவ அரசு முழு தயார்நிலையுடன் உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து