முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உக்ரைனுக்கு இன்னும் ஆயுதங்களை வழங்குவோம்: அதிபர் ஜோ பைடன்

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      உலகம்
Joe-Biden 2023-11-14

வாஷிங்டன், வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்பட ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளன என்று அதிபர் ஜோபைடன் தெரிவித்துள்ளார். 

ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த உக்ரைன், உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கூட்டமைப்பாக கருதப்படும் நேட்டோவில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது. 

இதனால் கோபம் அடைந்த ரஷ்யா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போரை தொடங்கியது. 2 ஆண்டுகளை கடந்தும் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. 

இந்த நிலையில் நேட்டோ அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த மாநாட்டில் நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் தொடக்க விழாவில் ஜனாதிபதி ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்பட ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளன.

நாங்கள் முக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, போரில்உக்ரைன் முன்னோக்கி செல்வது உறுதி செய்யப்படும். இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்து வருகிறது. 

போர் தொடங்கிய போது 5 நாட்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்று புடின் நினைத்தார். இரண்டரை ஆண்டுகள் கழித்து இன்னும் நிற்கிறது. தொடர்ந்து நிற்கும். 

இந்த போருக்கு முன், நேட்டோ உடைந்து விடும் என்று புடின் நினைத்தார் என்பது அனைத்து நட்பு நாடுகளுக்கும் தெரியும். இன்று, நேட்டோ அதன் வரலாற்றில் இருந்ததை விட பலமாக உள்ளது. இந்த அர்த்தமற்ற போர் தொடங்கிய போது, உக்ரைன் ஒரு சுதந்திர நாடாக இருந்தது. இன்றும் அது சுதந்திர நாடாகவே உள்ளது.

இந்த போரில் ரஷ்யா வெற்றி பெறாது. உக்ரைனே வெற்றி பெறும். உலக பாதுகாப்பின் அரணாக நேட்டோ உள்ளது என்பதை நினைவில் நாம் கொள்வோம். இவ்வாறு ஜோ பைடன் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து