முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.ஏ. படிப்புக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு

வியாழக்கிழமை, 11 ஜூலை 2024      இந்தியா
Exam

சென்னை, பட்டய கணக்காளர் படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகளை இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.) கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.

இந்திய பட்டய கணக்காளர் இறுதித்தேர்வு கடந்த மே மாதம் 2 தொகுதிகளாக 2-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில் பட்டய கணக்காளர் படிப்புக்கான இறுதித் தேர்வு முடிவுகளை இந்திய பட்டயக் கணக்காளர்கள் அமைப்பு (ஐ.சி.ஏ.ஐ.) கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது.  

இந்திய பட்டயக் கணக்காளர் படிப்புக்கான தேர்வில் இதுவரை இல்லாத அளவில் 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முந்தைய ஆண்டுகளில் 13 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

அதில் முதல் தொகுதி தேர்வு எழுதிய 74 ஆயிரத்து 887 மாணவர்களில் 20 ஆயிரத்து 479 பேர் தேர்ச்சி பெற்றனர். இரண்டாவது தேர்வை எழுதிய 58 ஆயிரத்து 891 மாணவர்களில் 21 ஆயிரத்து 408 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

இதே போல் சி.ஏ. குரூப் 1 இண்டர் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 764 பேரில் 31 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சி.ஏ. குரூப் 2 இன்டர் தேர்வு எழுதிய 71 ஆயிரத்து 145 பேர் எழுதியநிலையில் 13 ஆயிரத்து எட்டு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை icaiexam.icai.org, icai.org, icai.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 2 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 4 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 4 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து