முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடிகை அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ். அதிகாரிகளை சஸ்பெண்டு செய்த ஆந்திர மாநில அரசு

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      சினிமா
Kathambari-Jethwani 2024-03

Source: provided

ஐதராபாத் : மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமான ஒருவர் அளித்த புகாரில் 3 ஐ.பி.எஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.  

மும்பையை சேர்ந்த நடிகையும், மாடல் அழகியுமானவர் காதம்பரி ஜேத்வானி. இவர் கடந்த ஆண்டு மும்பை மாநகராட்சி அதிகாரி ஒருவர் மீது போலீசில் புகார் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, இந்த புகாரை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில்,  மோசடி செய்ததாக அப்போது ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஒருவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகை மீது போலீசில் புகார் செய்தார். 

இதனையடுத்து, நடிகை மீது வழக்குப்பதிவு செய்யாமலேயே ஆந்திரா போலீசார் கைது செய்தனர். அத்துடன், அதிகாரி மீது அளித்த புகாரை வாபஸ் பெறவும் போலீசார் துன்புறுத்தியுள்ளனர். இதனையடுத்து, புகாரை வாபஸ் பெற்ற நடிகை காதம்பரி ஜேத்வானி ஜாமீனில் வெளிவந்தார்.

தற்போது ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பொய் வழக்கில் தன்னை கைது செய்து போலீசார் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டி ஆந்திரா போலீசில் நடிகை புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து  போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,  மாநில உளவுத் துறை டி.ஜி.பி. அதிகாரியாக இருந்த சீதாராம ஆஞ்சநேயலு, முன்னாள் விஜயவாடா கமிஷனர் கிராந்தி ராணா டாடா, துணை கமிஷனர் விஷால் குன்னி ஆகிய 3 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இதன் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. 

இதைத்தொடர்ந்து அவசர கைது மற்றும் துன்புறுத்தலில் ஈடுபட்ட 3 மூத்த ஐ.பி.எஸ் அதிகாரிகளையும் சஸ்பெண்டு செய்து மாநில அரசு உத்தரவிட்டது. 

நடிகை காதம்பரி ஜேத்வானி கடந்த 2012-ம் ஆண்டு வெளியான 'சத்தா அட்டா' என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, பஞ்சாபி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து