முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      தமிழகம்
Sekar-Babu 2023-04-20

Source: provided

சென்னை : பழனி பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 

திருப்பதியில் பிரசாதமாக வழங்கப்பட்டுவரும் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டு கொழுப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், திருப்பதி கோவிலுக்கு நெய் விநியோகம் செய்த நிறுவனமே பழனி கோவிலுக்கும் விநியோகித்து வருவதாக தகவல்கள் பரவியது. இதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

இந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு  கூறியதாவது, 

 கடந்த 2021-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்தில் இருந்துதான் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

பழனி பஞ்சாமிர்தம் தரமாக வழங்கப்படுகிறது. தேவைக்கு அதிகமாக நெய் தேவைப்படும்போது தனியார் நிறுவனத்திடம் இருந்து நெய் வாங்கப்படுகிறது. அந்த தனியார் நிறுவனம், தற்போது புகாருக்குள்ளான நிறுவனம் கிடையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். 

பஞ்சாமிர்தம் குறித்து வதந்தி பரப்பிய பா.ஜ.க.வினர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து