முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட நடன இயக்குனர் ஜானி

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      சினிமா
Jani

ஐதராபாத், பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடன இயக்குநரான ஜானி மாஸ்டர் கடந்த 4 வருடங்களாக பெண் உதவி நடன இயக்குநரைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக தகவல். 2020இல் மும்பைக்கு செல்லும்போது இது முதல்முறையாக நடைபெற்றுள்ளது. இதை வெளியே சொல்லக்கூடாதென மிரட்டி பின்னர் பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார் ஜானி மாஸ்டர். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்தப் பெண் (21) அளித்த புகாரில் கடந்த செப்.17-ம் தேதி ஐதாராபாத் ராய்துர்கம் பகுதி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதன் பின்னர் தலைமறைவான ஜானி மாஸ்டரை காவல்துறையினர் கோவாவில் வைத்து கைது செய்தனர். ஐபிசி (இந்திய குற்றவியல் சட்டம்) 376, 506 மற்றும் போக்சோ சட்டப் பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு சாரளப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இந்நிலையில், அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா, “இதெல்லாம் எனது கணவர் பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் செயல். அருவருக்கத்தகக் குற்றச்சாட்டு. திட்டமிட்ட சதி. பாதிக்கப்பட்டதாகக் கூறும் பெண்ணிடம் சரியான ஆதாரங்கள் இருக்கின்றனவா?” எனக் கூறியிருந்த நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து