முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண் ஊழியர்களுக்கு 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை : கர்நாடக மாநில அரசு திட்டம்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      இந்தியா
Karnataka 2023 04 12

Source: provided

பெங்களூரு : அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை வழங்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. 

இது குறித்து கர்நாடக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் பெங்களூருவில்  நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பெண்கள் நலம் சார்ந்து கர்நாடக அரசு புதிய கொள்கையை வகுத்துள்ளது. இதற்காக 18 பேர் குழு தனது அறிக்கையை வழங்கியுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 நாட்கள் மாதவிலக்கு கால விடுமுறை வழங்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 

நாங்கள் இதனை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதுகுறித்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்களுடன் விரிவான ஆலோசனைக்கு பிறகு அதன் அடிப்படையில் சட்டம் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நாட்டில் தற்போது பீகார், கேரளா, ஒடிசாவில் மட்டுமே பெண் ஊழியர்களுக்கு இது போன்ற விடுமுறை அமலில் உள்ளது. கேரளாவில் பெண் ஊழியர்கள் மட்டுமின்றி 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கும் இந்த விடுமுறை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து