முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கிச்சூடு ஏன்? கோவை காவல் ஆணையர் விளக்கம்

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2024      தமிழகம்
KOVAI 2024-03-21

கோவை, ரவுடி ஆல்வின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது ஏன் என்பது குறித்து கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் காவலர் குடும்பத்தினருக்கான யோகா பயிற்சி நிறைவு விழாவில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசியதாவது:

கோவை கொடிசியா மைதானத்தில் ரவுடி ஆல்வின் பதுங்கி இருப்பதாக சனிக்கிழமை அதிகாலை கிடைத்த ரகசிய தகவலை அடுத்து , அவரை பிடிக்க ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான போலீஸார் முற்பட்டனர். அப்போது ரவுடி ஆல்வின், காவலர் ராஜ்குமாரை கத்தியால் தாக்கியதால் தற்காப்புக்காக ஆல்வின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

சுட்டுபிடிக்கப்பட்ட ரவுடி ஆல்வின் கன்னியாகுமரியில் சரித்திர பதிவேடு குற்றவாளி. அவர் மீது 3 கொலை வழக்கு, 2 கொலை முயற்சி வழக்கு உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ரவுடிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கடந்த மூன்று, நான்கு மாதங்களாக ஆல்வினை பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். 15 நாட்களுக்கு முன்பு வேறு மாநிலத்தில் தங்கி இருந்தபோது அவரை தனிப்படை போலீசார் பிடிக்க சென்றபோது தப்பிச் சென்று விட்டார்.

இந்த நிலையில், கோவை கொடிசியா மைதானத்தில் பதுங்கி இருந்த ரவுடி ஆல்வின் போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்டார். காவலரின் உயிருக்கு ஆபத்து வரும்போது துப்பாக்கியை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்படுகிறது. அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்காது. சரித்திர பதிவேடு குற்றவாளிகள் யார்?, யார் தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதை கண்காணித்து வருவதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து