முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய மகளிர் அணி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      விளையாட்டு
Woman 2024-11-19

Source: provided

புதுடெல்லி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணம்... 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடரின் முதல் இரு ஆட்டங்கள் பிரிஸ்பேனிலும், 3வது ஆட்டம் பெர்த்திலும் நடைபெற உள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர்... 

இந்நிலையில், இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் கேப்டனாகவும், ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த அணியில் ஷபாலி வர்மாவுக்கு இடம் அளிக்கப்படவில்லை. அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ள ஹார்லின் தியோல் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும், இந்த அணியில் விக்கெட் கீப்பர்களாக ரிச்சா கோஷ் மற்றும் யாஷ்டிகா பாடியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய அணி விவரம்:

ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), பிரியா புனியா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹார்லின் தியோல், யாஷ்டிகா பாடியா (விக்கெட் கீப்பர்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), தேஜல் ஹசப்னிஸ், தீப்தி ஷர்மா, மின்னு மனி, பிரியா மிஷ்ரா, ராதா யாதவ், டைட்டஸ் சாது, அருந்ததி ரெட்டி, ரேனுகா சிங் தாக்கூர், சைமா தாகோர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து