முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மாவுக்கு ஆதரவு

செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2024      விளையாட்டு
Rogit-Sarma 2024-07-03

Source: provided

ரோகித் சர்மா மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கவில்லை. அவரது மனைவி ரித்திகா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததால் உடன் இருந்து கவனிப்பதற்காக அவர் செல்லவில்லை. இரு தினங்களுக்கு முன்பு ரித்திகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனால் அவர் உடனடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரோகித் சர்மா செல்ல விரும்பவில்லை. 2-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. அதற்கு முன்பாக அணியுடன் இணைந்து விடுவேன் என்று ரோகித் சர்மா தேர்வு குழுவினரிடம் கூறியுள்ளார். எனவே முதலாவது டெஸ்டில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக துணை கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா அணியை வழிநடத்த இருக்கிறார்.

இதனிடையே முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பாகவே ரோகித் சர்மாவிற்கு குழந்தை பிறந்து விட்டதால் அவர் முதல் போட்டியில் விளையாட வேண்டும் என்று கங்குலி போன்ற பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை முன்வைத்தனர். இந்நிலையில் ரோகித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாதது சரிதான் என்றும் அவருக்கு குடும்பம் மிகவும் முக்கியம் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "எனது வாழ்க்கையிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாள் என்றால் எனது மகள் பிறந்த தினம்தான். அது ஒரு டெஸ்ட் போட்டி வெற்றி அல்லது உலகக்கோப்பை வெற்றியை விட அதிகம். இது மிகவும் வித்தியாசமானது. நீங்கள் அதை எதற்கும் ஒப்பிட முடியாது என்று கூறினார்.

______________________________________________________________________

நாதன் லயன் நம்பிக்கை

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் முதலாவது ஆட்டம் வரும் 22- தேதி பெர்த் மைதானத்தில் நடைபெற உள்ளது. கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த தொடர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேற இந்த தொடரில் இந்தியா கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதால் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பக்கமும் இதன் மீது திரும்பியுள்ளது. இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் கடும் குடைச்சல் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் தொடரில் இந்தியாவின் சிறந்த வீரரான விராட் கோலியை அவுட்டாக்க தமக்கு தாமே சவால் விடுத்துள்ளதாக நாதன் லயன் தெரிவித்துள்ளார். மேலும் நியூசிலாந்திடம் தோற்றாலும் இப்போதும் இந்தியா ஆபத்தான அணி என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:- "ஆஸ்திரேலியாவில் விராட் கோலியின் சாதனைகளை பாருங்கள். ஒட்டு மொத்தமாக அவருடைய புள்ளிவிவரங்களையும் பாருங்கள். அவரைப் போன்ற சாம்பியன் வீரர்களை நீங்கள் முடிந்தவர்களாக எழுத முடியாது. விராட் கோலியின் மீது மரியாதை தவிர்த்து என்னிடம் வேறு எதுவும் இல்லை. அதே சமயம் அவரை நான் அவுட்டாக்க விரும்புகிறேன் என்று சொல்வதில் ஒளிந்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் அது சவாலாகும். அவரும் ஸ்டீவ் சுமித்தும் கடந்த சகாப்தத்தில் விளையாடிய 2 சிறந்த பேட்ஸ்மேன்கள். அவருக்கு எதிராக கடந்த காலங்களில் நிறைய முறை போட்டியிட்டது சிறந்த விஷயமாகும். இந்தியா முழுவதுமாக சூப்பர் ஸ்டார்கள் நிறைந்த ஆபத்தான அணியாகும். அவர்களிடம் நிறைய அனுபவமும் இருக்கிறது என்று தெரிவித்தார்.

______________________________________________________________________

தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது. 

இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெம்பா பவுமா , டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்ஸி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மஹராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின் .

______________________________________________________________________

பாகிஸ்தான் வீரர் சாதனை

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் ஆக்கியது. இதில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 117 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பாபர் அசாம் அடித்த 41 ரன்களையும் சேர்த்து இதுவரை டி20 கிரிக்கெட்டில் 4192 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ளார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 4231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். எனினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் மற்றும் ரோகித் ஓய்வு பெற்று விட்டதால் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அந்த பட்டியல் வருமாறு., 1. ரோகித் சர்மா - 4231, 2. பாபர் அசாம் - 4190 ரன்கள், 3. விராட் கோலி - 4188 ரன்கள், 4. பால் ஸ்டிர்லிங் - 3655 ரன்கள், 5. மார்ட்டின் குப்தில் - 3531 ரன்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து