Idhayam Matrimony

காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2024      தமிழகம்
Students

Source: provided

சென்னை : காலாண்டு விடுமுறையை தொடர்ந்து தமிழகத்தில் நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதையொட்டி போதிய முன்னேற்பாடுகளை தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் எடுத்திருந்தனர்.

முதலில் 5 நாட்கள் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விடைத்தாள் திருத்தம், மதிப்பெண் பட்டியல், விடுமுறை நாட்களை செலவிடுதல் ஆகியவற்றுக்கு கூடுதலாக விடுமுறை தேவை என்று பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின. இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. 

அதில் இடைப்பட்ட வியாழன், வெள்ளி ஆகிய நாட்களுக்கும் விடுமுறை விட்டதால் கூடுதலாக 4 நாட்கள் சேர்ந்து கொண்டது. அப்படி பார்த்தால் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை 9 நாட்கள் விடுமுறை கிடைத்தது. இது மாணவர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுவதை கருத்தில் கொண்டு பள்ளி வளாகங்களில் போதிய முன்னேற்பாடுகளை செய்ய கல்வித்துறை அறிவுறுத்தியது. வளாகங்களை தூய்மைப்படுத்துதல், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உறுதி செய்தல், முதல் பருவத் தேர்விற்கான விடைத்தாள்களை மாணவர்களிடம் அளித்தல், இரண்டாம் பருவத் தேர்விற்கான நோட்டு புத்தகங்களை வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கான பணிகளை பள்ளி தலைமை ஆசிரியர்களும், ஆசிரியர்களும் மேற்கொண்டு வந்தனர். இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பே பள்ளிகளுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று (அக்டோபர் 7) திட்டமிட்டபடி அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து