முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      தமிழகம்
Saminathan 2023-07-26

Source: provided

சென்னை: செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் கருணை அடிப்படையில் இருவரை அலுவலக உதவியாளர்களாகப் பணி நியமனம் செய்து நியமன ஆணைகளை நேற்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள், அறிவிப்புகள், அரசின் சாதனைகள், செய்தி வெளியீடுகள், அறிக்கைகள், வேண்டுகோள்கள் அனைத்தும் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அரும்பணிகளைத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

தமிழ்நாடு அரசு, தலைமைச் செயலகம், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்து வந்த எஸ்.அன்பழகன் அவர்கள் கடந்த 5.10.2022 அன்று திருநெல்வேலி அரசுப் பொருட்காட்சியில் பணியிலிருக்கும்போது, இயற்கை எய்தினார். அவருடைய சட்டப்படியான வாரிசுதாரர்களில் ஒருவரான அவரது இளைய சகோதரர் எஸ்.குணாநிதி என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளராக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் இன்று (24.10.2024) பணி நியமன ஆணையை வழங்கினார்.

அதே போல, சென்னை ராஜாஜி மண்டபம் (ம) காந்தி மண்டபத்தில் தேர்வு நிலை தோட்டப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த ஜி.வரலட்சுமி கடந்த 4.1.2024 அன்று இயற்கை எய்தியதால், அவருடைய ஒரே மகனான டி.வி.பரமேஸ்வரராவ் என்பவருக்கு கருணை அடிப்படையில் அலுவலக உதவியாளர் பணி நியமனம் வழங்கி உரிய நியமன ஆணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் இன்று (24.10.2024) வழங்கினார்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து