முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல்: இந்திய அணி தொடர்ந்து முதலிடம்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      விளையாட்டு
24-Ram-51

Source: provided

மிர்புர்: வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்ற நிலையிலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் தொடர்கிறது.

அபார வெற்றி... 

வங்காளதேசம் - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மிர்புரில் நடைபெற்றது. கடந்த 21-ம் தேதி தொடங்கிய இந்த போட்டி 4-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது. இதில் தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய அணி (68.06 சதவீதம்) முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா (62.50 சதவீதம்) 2ம் இடத்திலும், இலங்கை (55.56 சதவீதம்) 3ம் இடத்திலும் உள்ளன.

4-வது இடத்திற்கு... 

வங்காளதேசத்திற்கு எதிராக வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா (47.62 சதவீதம்) 6வது இடத்தில் இருந்து 4வது இடத்திற்கு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து நியூசிலாந்து (44.44 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 5வது இடத்திலும், இங்கிலாந்து (43.06 சதவீதம்) ஒரு இடம் சரிந்து 6வது இடத்திலும் உள்ளன. இதையடுத்து 7 முதல் 9 இடங்களில் முறையே வங்காளதேசம் (30.56 சதவீதம்), பாகிஸ்தான் (25.93 சதவீதம்), வெஸ்ட் இண்டீஸ் (18.52 சதவீதம்) அணிகள் உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து