முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2024-முதலமைச்சர் கோப்பை: சென்னை அணி சாம்பியன்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      தமிழகம்
CM-Cup

Source: provided

சென்னை: முதலமைச்சர் கோப்பை 2024 போட்டியில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று நடைபெற்ற நிறைவு விழாவில் சென்னை அணிக்கு கோப்பையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில விளையாட்டு போட்டி சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் நடைபெற்றது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுப் பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் என 5 வகையான பிரிவுகளில் போட்டி நடைபெற்றது. இதில் மொத்தம் 11,56,566 நபர்கள் 36 வகையான விளையாட்டு போட்டிகளில், 168 பிரிவுகளில் கலந்து கொண்டனர்.

மாவட்ட, மண்டல அளவில் வெற்றி பெற்ற 33,000 நபர்களுக்கான போட்டிகள் அக்டோபர் 4 முதல் நேற்று (24-ம் தேதி) வரை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின்,துணை முதல் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த தொடரில் 105 தங்கம் உட்பட 254 பதக்கங்களை வென்ற சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது. 31 தங்கம் உட்பட 93 பதக்கங்களுடன் செங்கல்பட்டு 2-வது இடமும், கோயப்புத்தூர் 102 (23 தங்கம்) பதக்கங்களுடன் 3-வது இடமும் பிடித்தன. வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து