முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      இந்தியா
Air-India 1

Source: provided

மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.7.6 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்திறங்கிய பயணிகளிடம் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது 2 பயணிகள் போலியான அடையாள சான்றுகளுடன் பயணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

அவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், இருவரும் தங்கள் உடைமைகளில் 9.487 கிலோ தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர். அவர்களிடம் இருந்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு சுமார் 7 கோடியே 69 லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து