முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புனே 2-வது டெஸ்ட் போட்டி: அஸ்வின், சுந்தர் சுழலில் சுருண்ட நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களுக்கு ஆல் அவுட்

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      விளையாட்டு
24-Ram-50

Source: provided

புனே: புனே 2-வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின், சுந்தர் சுழலில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 259 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்களையும் தமிழக வீரர்கள் வீழ்த்தினர்.

திணறடித்தனர்... 

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி புனேயில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை எந்தவித சிக்கலுமின்றி எதிர்கொண்டது. ஆனால் சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். குறிப்பாக அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

ரவீந்திரா 65 ரன்கள்... 

இவர்களின் சிறப்பான பந்துவீச்சால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கான்வே 76 ரன்களும்,ரச்சின் ரவீந்திரா 65 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் சுந்தர் 7 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினர். 

ரோகித் அவுட்...

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 9 பந்துகளை சந்தித்த நிலையில், சவுதி பந்துவீச்சில் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த கில் - ஜெய்ஸ்வால் நிதானமாக விளையாடி முதல் நாளில் மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாமல் பார்த்துக்கொண்டனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 1 விக்கெட்டை இழந்து 16 ரன்கள் அடித்துள்ளது. ரோகித் ஜெய்ஸ்வால் 6 ரன்களுடனும், கில் 10 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.

தமிழக வீரர்கள் அபாரம்

இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி இந்திய வீரர்களான தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்கி மொத்தமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 259 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. அந்த அணியின் 10 விக்கெட்டுகளையும் சுந்தர் (7) மற்றும் அஸ்வின் (3) வீழ்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து