முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமதி

வியாழக்கிழமை, 24 அக்டோபர் 2024      தமிழகம்
Stalin 2021 11 29

Source: provided

சென்னை: திருச்சியில் ரூ.81.72 கோடியில் புறவழிச்சாலை திட்டப்பணிகளை மேற்கொள்ள அனுமதி அளித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

திருச்சியில் பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2 கி.மீ நீளத்திற்கு புறவழிச்சாலை அமைக்கும் திட்டப்பணி பகுதி-Iக்கு ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"தமிழ்நாடு முதல்வர் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில், திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் முதல் கோணக்கரை கரூர் சாலை வரை, கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறுகளின் கிழக்கு கரை பகுதியில் மூன்று பகுதிகளாக புறவழிச்சாலை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதில், பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2 கி.மீ நீளத்திற்கு திட்டப்பணி பகுதி-I ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்வதற்கு நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாநகரில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், பல்வகை பயன்பாட்டு வசதிகளுக்கான மையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் இதர உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருவதில் பணிகள் இறுதி நிலையில் உள்ளது. மேலும், இப்பகுதியில் காய்கறி மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை அங்காடி மற்றும் டைடல் பார்க், கணினி மென்பொருள் பூங்கா அமையவுள்ளன.

பெருகிவரும் மக்கள் தொகை காரணமாகவும், மாநகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை குறைக்கும் வகையிலும், மேற்படி பகுதியில் புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இச்சாலையானது பஞ்சப்பூரில் தொடங்கி கரூர் சாலை வரை 9.90 கி.மீ நீளத்திற்கு அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு முதல்வர் திருச்சி மாநகராட்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2 கி.மீ. நீளத்திற்கு புறவழிச்சாலை திட்டப்பணி பகுதி-I-க்கு ரூ.81.72 கோடி மதிப்பீட்டில் நிர்வாக அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

திருச்சி மாநகராட்சி புறவழிச்சாலை திட்டப்பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படும். திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்போது மாநகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து