முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      இந்தியா
Rajasthan 2024-10-26

Source: provided

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கார் -லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள். 

ராஜஸ்தானின் அனுப்கரில் பகுதியில் கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உயிரிழந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அனுப்கரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 911 இல் உள்ள பஸ் நிலையம் அருகே நடந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

விபத்துக்குள்ளான கார், டிராக்டர் டிராலியை முந்தி சென்ற போது, எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியதாக கூறப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தவர்கள், கார் டிரைவர் பிரபு (40), அவரது தந்தை ஓம்பிரகாஷ் (65), இவர்களது உறவினர் பல்பீர் (45) என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து