முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      தமிழகம்
Mettur Dam 2023-06-02

Source: provided

சேலம் : நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக இருந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 104.76 அடியாக உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. 

இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது. 

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 31 ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் நேற்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 104.76 அடியாக உயர்ந்தது. 

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 

அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 71.14 டி.எம்.சி..தண்ணீர் இருப்பு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து