முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை முந்துகிறார் டிரம்ப் : புதிய கருத்துக்கணிப்பில் தகவல்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      உலகம்
Kamala-Trump 2024-10-26

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது புதிய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 5-ம் தேதி நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர். அமெரிக்க தேர்தல் களம் எப்படி இருக்கிறது என்பது குறித்து அமெரிக்காவின்  செய்தி நிறுவனம் ஒன்று கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. 

அக்டோபர் 19-22 க்கு இடையில் 1,500 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. 

டிரம்பிற்கு ஓட்டளிக்க 47 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். கமலா ஹாரிசுக்கு 45 சதவீத வாக்காளர்கள் ஆதரவு தெரிவித்தனர். இரண்டு அதிபர் வேட்பாளர்களுக்கும் இன்னும் 50 சதவீதத்திற்கும் குறைவான ஆதரவே உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், கமலாவுக்கு 49 சதவீதம் பேரும், டிரம்ப்வுக்கு 47 சதவீத பேரும் ஆதரவு தெரிவித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப்பை விட கமலா, முன்னிலையில் இருந்த நிலையில் தற்போது டிரெண்ட் என்பது முற்றிலுமாக மாறி உள்ளது. 

இதனால் டிரம்ப் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்று, வெள்ளை மாளிகையில் அமர போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து