முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் இன்று கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      இந்தியா
Kerala 2024-05-02

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. 

தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் கேரளாவில் மழை பெய்து வருகிறது. அங்கு இன்று (27-ம் தேதி)  கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும்  இன்று (27-ம் தேதி) திருவனந்தபுரம், பத்தினம் திட்டா, கொல்லம், ஆலப்புழா ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் மாநிலத்தில் நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் ஆற்று பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி சுற்றுலா தலங்களுக்கு செல்வதையும் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி இருக்கிறார்கள். 

முக்கியமாக பொன்முடி, கல்லாறு, மாங்கயம் ஆகிய இடங்களில் உள்ள சுற்றுச்சூழல் சுற்றுலா மையங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு சில இடங்களில் பிரபல சுற்றுலா தலங்களுக்கு செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. 

கனமழை எச்சரிக்கை காரணமாக கேரள மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மற்றும் தாலுகா அளவில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து