முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒபாமாவுக்கு நோபல் பரிசு: டொனால்டு டிரம்ப் விமர்சனம்

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      உலகம்
Obama-Trump 2024-10-26

Source: provided

வாஷிங்டன் : ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து  டிரம்ப் விமர்சித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்  வரும்  5-ம் தேதி நடைபெற உள்ளது.  ஆளுங்கட்சி  சார்பில் நிற்கும் கமலா ஹாரிஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் நிற்கும் டொனால்டு டிரம்ப் ஆகிய இருவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கமலா ஹாரிஸை ஆதரித்து முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில்  ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து  டிரம்ப் விமர்சித்துள்ளார். 

நெவாடா நகரில் நடத்த மாற்றத்திற்காக ஒன்றிணைவோம் என்ற பிரச்சார நிகழ்வில்  டிரம்ப் பேசியதாவது,

அவர்கள் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கியுள்ளனர். அந்த பரிசை தான் ஏன் பெற்றோம் என்பதற்கான காரணம் ஒபாமாவுக்கே தெரிந்திருக்காது. அவர் (தேர்தலில் வென்று) நிர்வாகம் செய்ய தொடங்கிய உடனே அந்த விருதை அவர் பெற்றுள்ளார்.

நான் அவரை விட மிகப்பெரிய, மிக சிறந்த, யூகிக்கவே முடியாத தேர்தலில் வெற்றி பெற்றேன், ஆனால் அவர்கள் ஒபாமாவுக்கு நோபல் பரிசை வழங்கியுள்ளார்கள் என்று  டிரம்ப் கூறினார். 

பராக் ஒபாமாவுக்கு கடந்த 2009-ம்  ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது ஒபாமாவின் இடத்தில் தான் உட்பட யார் இருந்திருந்தாலும் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கும் என்று டிரம்ப் இந்த கூட்டத்தில் பேசியுள்ளது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து