முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரியங்கா வெற்றிக்காக காங்கிரஸ் தேர்தல் பணிக்குழு நியமனம் : செல்வப்பெருந்தகை அறிவிப்பு

சனிக்கிழமை, 26 அக்டோபர் 2024      தமிழகம்
Selvabaru 2023-02-19

Source: provided

சென்னை : வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில் முன்னாள் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 45 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். 

இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வெற்றிக்காக தேர்தல் பணியாற்றிட எனது தலைமையில் முன்னாள் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 45 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளோம். 

நவம்பர் மாதம் 2-ம் தேதி முதல் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான 11-ம் தேதி மாலை வரை இந்த தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் வயநாடு தொகுதியில் தேர்தல் பணியாற்றிட உள்ளார்கள். எனது தேர்தல் பிரச்சாரம் வருகிற 2, 3 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட உள்ளது. 

பாராளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்காவின் வெற்றிக்கு பணியாற்றிட விருப்பம் உள்ள தமிழகத்தை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், முன்னணி அமைப்புகள், இதர துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் தமிழக காங்கிரசால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

தேர்தல் பணியாற்ற விருப்பம் உள்ள நமது இயக்க நண்பர்கள் தங்களுடைய விருப்பத்தை தமிழக காங்கிரஸ் தலைமையகத்திற்கு தெரிவிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 21 hours ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 22 hours ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 23 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 23 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 22 hours ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 22 hours ago
View all comments

வாசகர் கருத்து