முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீபாவளியை முன்னிட்டு விமான கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
Air-India

Source: provided

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்நாட்டு விமான முனையத்தில் விமான கட்டணம் 2 மடங்கு அதிகரித்துள்ளது. 

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னையில் இருந்து  மதுரை, திருச்சி, தூத்துக்குடி,கோவை செல்லும் ஏராளமானோர் விமான பயணத்தை தேர்வு செய்து உள்ளனர். 

இதன் காரணமாக உள்நாட்டு விமான முனையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அலைமோதுகிறது. இதனால் தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் விமான கட்டணங்கள் 2  மடங்கு அதிகரித்து உள்ளன. 

சென்னை-தூத்துக்குடிக்கு  சாதாரண நாட்களில் விமான  கட்டணம் ரூ.4,109 ஆகும். நேற்று விமான கட்டணம் ரூ.8,976 முதல் ரூ.13,317 வரை உள்ளது. இதேபோல் மதுரைக்கு ரூ.11,749 முதல் ரூ. 17,745 வரையும், திருச்சிக்கு ரூ.8,211 முதல் ரூ.10,556 வரையும், கோவைக்கு ரூ.7,872 முதல் ரூ.13,428 வரையும், சேலத்திற்கு ரூ.8,353 முதல், ரூ.10,867 வரையும் கட்டணமாக உள்ளது. 

இன்று தீபாவளிக்கு முந்தைய தினம் என்பதால், விமான கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. இதை போல் திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத் ,டெல்லி, கொல்கத்தா மற்றும் அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களும் உயர்ந்து உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து