முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உச்ச நேரம் மாற்றத்தால் தொழில் நிறுவனங்களுக்கு கடும் பாதிப்பு: தி.மு.க. அரசுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
OPS 2022 12 29

சென்னை, உச்ச நேரத்தை மாற்றி தொழில் நிறுவனங்களை தி.மு.க. அரசு வாட்டி வதைப்பது கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பொத்த மின் பயன்பாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திகளான காற்றாலை மற்றும் சூரிய சக்தியின் பங்கை அதிகரிப்பது மற்றும் அவற்றின் இலக்குகளை நிறைவேற்றுவது தொடர்பான நோக்கங்களுக்காக தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் உருவாக்கப்பட்டது. மேற்படி நிறுவனம், நிதி இழப்பினை மேற்கோள்காட்டி தொழில் நிறுவனங்களுக்கான உச்ச நேரம் (Peak Hour) மற்றும் சூரிய சக்தி சரிகட்டலில் (Solar Power Adjustments) மாற்றங்களை மேற்கொண்டு அதற்கான கருத்துருவினை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. 

இந்தக்கருத்துருவில் தெரிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் மிக அவசியமானவை என்று தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் தெரிவித்துள்ளது என்று பத்திரிகையில் செய்து வந்துள்ளது. அதே சமயத்தில், தொழில் நிறுவனங்கள், குறிப்பாக சூரிய சக்தியில் அதிகமாக முதலீடு செய்துள்ள நிறுவனங்கள் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து கவலை அடைந்துள்ளன.

தற்போது, தொழில் நிறுவனங்கள் இரவு 10 மணியிலிருந்து காலை 5 மணி வரை தன்னியக்க உற்பத்தி நிலையங்களிடமிருந்து பெறப்படும் சூரிய சக்தியை கொண்டு தங்கள் தொழில்களை மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில், உச்ச நேரத்தை மாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை நீட்டிப்பது என்ற தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் கருத்துகு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில், மாலை 5 மணிக்கு மேல் சூரியசக்தி மின்சாரத்தை பயன்படுத்த முடியாத நிலை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்படும்.

இதன் காரணமாக, சூரிய சக்தியில் அதிக முதலீடுகளை மேற்கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் வெருவாக பாதிக்கப்படுவதோடு, இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் விலையும் கணிசமாக உயரும் அபாயம் ஏற்படும் என்று தமிழ்நாடு நூற்பாலைகள் சங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, மின்சார கட்டண உயர்வினாலும், ஆண்டுக்கு ஒருமுறை உபரக்கூடிய மின்சார கட்டண உயர்வினாலும், உச்ச நேர மின் கட்டண உயர்வினாலும், தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் இதுபோன்ற கருத்துரு தொழில் துறையினரை பெரும் கவலை அடையச் செய்துள்ளது. திமுக அரசின் இந்தச் செயல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது தொழில் துறையினரை வாட்டி வதைக்கும் இந்தச் செயல் கடும் கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து