முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரு பவுன் ரூ.59 ஆயிரத்திற்கு விற்பனை: புதிய உச்சம் தொட்டது 1 சவரன் தங்கம் விலை

செவ்வாய்க்கிழமை, 29 அக்டோபர் 2024      தமிழகம்
gold 2023 01 26

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று (அக்.,29) 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து 7,375 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.59,000க்கும் விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், வழக்கத்தை விட தங்கம் விற்பனை அதிகமாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக தங்கம் விலை உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் அக்.,24ம் தேதி 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 7,285 ரூபாய்க்கும்; சவரன், 58,280 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம், 110 ரூபாய்க்கு விற்பனையானது.

அக்.,25ம் தேதி தங்கம் விலை கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து, 7,295 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து, 58,360 ரூபாய்க்கு விற்பனையானது. அக்.,26ம் தேதி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.7,360க்கு விற்பனையானது. ஒரு சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.58,880க்கு விற்பனையானது

நேற்று முன்தினம் (அக்.28) ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58,520க்கும், கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315க்கும் விற்பனையானது. இந்நிலையில் நேற்று (அக்.,29) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.60 அதிகரித்து 7,375 ரூபாய்க்கும், சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.59,000க்கும் விற்பனையானது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.59 ஆயிரத்தை தொட்டதால் நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 4 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 4 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து