முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் காற்று மாசுபாடு: வரும் 24-ம் தேதி வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      உலகம்
Pak 2024-11-16

Source: provided

லாகூர் : காற்று மாசுபாடு காரணமாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வரும் 24-ம் தேதி வரை கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தில் காற்று மாசுபாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  காற்று தரக்குறியீடு இதுவரை இல்லாத வகையில் சாதனை பதிவாக, 1,600 என்ற அளவில் உயர்ந்து உள்ளது.  காற்றின் தரம் மோசமடைந்து உள்ள சூழலில், பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.  

இதன்படி, இன்று 17-ம் தேதி வரை அனைத்து கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்த நிலையில், புகைமூட்டம் மற்றும் குறைவான தொலைவையே பார்க்க கூடிய சூழல் போன்றவற்றால், அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 24-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இதனால், அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் தனியார் கல்வி பயிற்சி மையங்கள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் ஆன்லைன் வழியே கல்வி பயிற்சியை தொடர அறிவுறுத்தப்பட்டு உள்ளது.  எனினும், முர்ரீ மாவட்டத்திற்கு இதற்கு விதிவிலக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன்பு, புகைமூட்டம் பரவி நிலைமை மோசமடைந்த நிலையில், லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் வாரத்திற்கு 3 நாட்கள் வரை முழு ஊரடங்கை பஞ்சாப் அரசு நேற்றுமுன்தினம் அமல்படுத்தியது.  

இதன்படி, இன்று இந்த முழு ஊரடங்கு தொடரும்.  வருகிற நாளை திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்கு நிலைமை கண்காணிக்கப்படும் என அரசு தெரிவித்து உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து