முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லை திரையரங்கில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு: 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை : சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      தமிழகம்
Boom

Source: provided

நெல்லை : நெல்லை திரையரங்கில் மர்ம நபர்களால் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பத்தில் 3 தனிப்படைகளை அமைத்து போலீசார் விசாரித்து வரும் நிலையில், சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் மேலப்பாளையம் பகுதியில் அமரன் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்க வளாகத்திற்குள் நேற்று அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர்கள் சிலரால் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடி விட்டனர். மொத்தம் 3 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு உள்ளன.இதனால், பொருட்சேதம் எதுவும் இல்லை. சம்பவம் பற்றி சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தென்மண்டல தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 2 தனிப்படையும் , உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஒரு தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையில் , பெட்ரோல் குண்டு வீசப்பட்ட திரையரங்கை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டுள்ளனர் . திரையரங்கில் இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் ஆய்வு செய்வதற்காக, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை துணை ஆணையர் விஜயகுமார், தலைமையிலான போலீசார் இந்து முன்னணியினரை கைது செய்தனர். பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்ததாக போலீசார் விளக்கமளித்துள்ளனர் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து