முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முந்தைய அரசுகள் வாக்குவங்கிக்கு மட்டுமே அரசியலை பின்பற்றின : காங்கிரஸ் மீது பிரதமர் மறைமுக குற்றச்சாட்டு

சனிக்கிழமை, 16 நவம்பர் 2024      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுதில்லி : முந்தைய அரசுகள் வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்ற வகையில் கொள்கைகளை வகுத்து வந்ததாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

ஹெ.டி தலைமைத்துவ உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் கூறியது, தனது அரசு மக்களால் மக்களுக்காக என்ற மந்திரத்தை முன்னோக்கி நகர்த்தி வருகின்றது. ஒவ்வொரு தேர்தலிலும் பல நாடுகளிலுல் அரசு மாறும்போது, இந்தியாவில் மட்டும் மக்கள் மூன்றாவது முறையாக பாஜக தலையிலான மத்திய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர்.

முன்னதாக தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காக அரசாங்கம் நடத்தப்பட்டன. மேலும் வாக்கு வங்கி அரசியலுக்கு ஏற்றவாறு கொள்கைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், எங்கள் அரசு மீது மக்களின் நம்பிக்கையை மீண்டும் நிலைபெற்றுள்ளதை உறுதி செய்துள்ளோம்.மக்களால், மக்களுக்காக முன்னேற்றம் என்ற மந்திரத்தை முன்னிறுத்தி நமது அரசு முன்னேறி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மக்கள் மத்தியில் ஆபத்தை ஏற்படுத்தும் கலாச்சாரத்தை மீண்டும் உருவாக்கியுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

சுதந்திரத்திற்கு பிறகு 70 ஆண்டுகளில் வழங்கப்பட்டதை விட கடந்த 10 ஆண்டுகளில் அதிக எரிவாயு இணைப்புகளை வழங்கினோம். மக்களுக்காக பெரிய அளவில் செலவு செய்வதும், மக்களுக்காக பெரிய தொகையைச் சேமிப்பதும்தான் எங்கள் அரசின் அணுகுமுறை. மும்பையில் 26/11 பயங்கரவாத தாக்குதலை நினைவுகூர்ந்த பிரதமர், பயங்கரவாதிகள் தங்கள் வீடுகளையும் பாதுகாப்பற்றதாக உணரும் காலம் இப்போது மாறிவிட்டது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து