முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவேரியார் பேராலய திருவிழா: டிசம்பர் மாதம் 3-ம் தேதி குமரிக்கு உள்ளூர் விடுமுறை

திங்கட்கிழமை, 18 நவம்பர் 2024      தமிழகம்
Kumai-1 2024-05-06

Source: provided

கன்னியாகுமரி : சவேரியார் பேராலய திருவிழாவினை முன்னிட்டு டிச., 3-ம் தேதி கன்னியாகுமரியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டார் மறை மாவட்டத்தின் தலைமை பேராலயமாக நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அமைந்துள்ளது. உலக அளவில் புனித சவேரியாருக்கென முதன்முதலாக எழுப்பப்பட்ட ஆலயம் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றுள்ளது. இந்த ஆலயத்தின் 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 24-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 3-ந் தேதி நிறைவடையும். இந்த ஆண்டுக்கான திருவிழா அண்மையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் ஒவ்வொரு நாள் விழாவும் நற்செய்தி வாசக கருப்பொருளில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கோட்டார் தூய சவேரியர் பேராலய திருவிழாவை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3 ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும், உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார். விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, டிசம்பர் 14-ம் தேதியை பணி நாளாக மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 5 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 7 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து