முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குரூப்-1 முதன்மை தேர்வை கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் : டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 நவம்பர் 2024      தமிழகம்
TNPSC 2022 12 20

Source: provided

சென்னை : குரூப்-1, 1பி முதன்மைத் தேர்வை கருப்பு மை பேனாவில் மட்டுமே எழுத வேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) தனது டுவிட்டர்  பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

குரூப்-1, 1பி பணிகளில் வரும் காலிப் பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வில் தேர்வர்கள் கருப்பு மை பேனாவை (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும். 

தேர்வர்கள் விடைப் புத்தகம் முழுவதும், அதாவது தேர்வு எண்ணை எழுதுதல், முதல் பக்கத்தில் கையொப்பமிடுதல், விடை எழுதுதல், படம் வரைதல், அடிக்கோடிடுதல், மேற்கோள்காட்டுதல், விடை புத்தகத்தில் பயன்படுத்தாத இடங்களை / தேவையான எண்ணிக்கைக்கு அதிகமான விடைகளை அடித்தல், போன்றவற்றுக்கு ஒரேவகையான கருப்பு மை பேனாவை (மையூற்று பேனா அல்லது பந்துமுனை பேனா அல்லது ஜெல்பேனா) மட்டுமே உபயோகிக்க வேண்டும்.

தேர்வர்கள் மேற்கூறிய தேவைகளுக்கு ஒரே வகை கொண்ட கருப்பு மை பேனாக்களை போதுமான எண்ணிக்கையில் வைத்திருக்க வேண்டும். தேர்வர்கள் கருப்பு மை பேனாக்களை தவிர மற்ற பேனாக்களை உபயோகித்தால் அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 3 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 3 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து