முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்து கழக இயக்குநராக சிறப்பு செயலர் கார்மேகம் நியமனம்

புதன்கிழமை, 27 நவம்பர் 2024      தமிழகம்
BUS 2024-08-30

சென்னை, போக்குவரத்து கழகங்களின் இயக்குநராக துறையின் சிறப்பு செயலர் எஸ்.கார்மேகம் நியமிக்கப்பட்டுள்ளார். 

சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஸ்வரண் சிங் ஐ.ஏ.எஸ். கடந்த 2001-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். நிர்வாகத்தை அவர் சிறப்பாக நடத்தியதால், போக்குவரத்து கழகங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியை மட்டுமே பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் என அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநராக ஆல்பி ஜான் வர்கீஸ் ஐஏஎஸ் கடந்த 2023-ம் ஆண்டு பொறுப்பேற்றார்.

இதே போல, மற்ற போக்குவரத்து கழகங்களின் தலைவராகவும் ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, போக்குவரத்து துறை சிறப்பு செயலராக பொறுப்பேற்ற ஆர்.லில்லி, சேலம், மதுரை திருநெல்வேலி போக்குவரத்து கழகங்களின் தலைவர் மற்றும் இயக்குநராகவும், சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்து கழகம், விழுப்புரம், கோவை, கும்பகோணம் போக்குவரத்து கழகங்கள், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றின் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டார்.

லில்லி கடந்த மாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், போக்குவரத்து சிறப்பு செயலராக எஸ்.கார்மேகம் பொறுப்பேற்றார். இந்த நிலையில், போக்குவரத்து கழகங்களின் தலைவர் உட்பட லில்லி வகித்து வந்த அனைத்து பொறுப்புகளிலும் கார்மேகத்தை நியமித்து துறை செயலர் பணீந்திர ரெட்டி அரசாணை பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 days ago
View all comments

வாசகர் கருத்து