எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை விவரம்: தமிழ் வளர்ச்சித் துறையால் தமிழ்ச் சான்றோர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவரவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை, சிறப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 188 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூபாய் 15.32 கோடி நூலுரிமைத் தொகை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 139 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு 9.71 கோடி நூலுரிமைத் தொகை ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு நாளிதுவரை 31 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையர்களுக்கு ரூ.3.75 கோடி ஒப்பளிப்பு செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 22.08.2024 அன்று, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நூலுரிமைத்தொகையின்றி நாட்டுடைமை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
இவ்வறிவிப்பிற்கிணங்க இலக்கிய இலக்கணப் படைப்புகளாகவும் ஆய்வாகவும் தமிழன்னைக்குத் தொண்டறம் பூண்டு வாழ்ந்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான க.ராஜாத்தி அம்மாளுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை 22.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.00 மணியளவில் அவர்களின் இல்லத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதனால் வழங்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மு.பெ சாமிநாதன், “முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூல்கள் நாட்டுமையாக்குவதற்காக, முதல்வர் ஸ்டாலினால் நடவடிக்கை எடுத்து அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அந்த வகையில் அவருடைய அனுமதியோடு, அவரின் உத்தரவின் அடிப்படையில் இன்றைக்கு அந்த அரசாணையை, கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடத்தில் அரசின் சார்பில் ஒப்படைத்தோம்.
ஏறத்தாழ பல்வேறு படைப்புகளை தந்தவர். இன்னும் சொல்லப்போனால், பள்ளிப்பருவத்தில் தான் எழுதத் துவங்கி “மாணவன் நேசன்” என்கின்ற பத்திரிகை கையேடை துவங்கி அதிலிருந்து முரசொலியில் உடன்பிறப்பிற்கான பல்லாயிரக்கணக்கான கடிதங்களை எழுதி இடையில் குரளோவியம், நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ் போன்ற படைப்புகளை தந்தவர். திரையுலகிலும் முத்திரை பதித்தவர். அதேபோல, 5 முறை இந்த நாட்டின் முதல்வராக பணியாற்றியவர்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஏறத்தாழ 70 ஆண்டு காலம் பணியாற்றியவர். அப்படிப்பட்ட மகத்தான தலைவருடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டு, இதுவரை 179 படைப்பாளர்களுடைய நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டிருக்கிறது.
அதற்கெல்லாம், அரசின் சார்பில், நிதி வழங்கப்பட்டிருந்தாலும் பாரதியாரை தவிர, இன்றைக்கும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தார் அதற்கு எதுவும் தொகை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, கட்டணம் இல்லாமல், இன்றைக்கு நிதி இல்லாமல் அந்த படைப்புகள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளது. மொத்தம், 179 நூல்கள் பல்வேறு தலைப்புகளில், நெஞ்சுக்கு நீதி, குறளோவியம், சங்கத்தமிழ் மற்றும் முரசொலியில் தொடர்ந்து உடன்பிறப்பிற்கான கடிதங்கள் இப்படிப்பட்ட அனைத்து படைப்புகளும் இன்றைக்கு நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன” என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 3 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
ஹர்திக் குறித்து பரோடா அணி
21 Dec 2024கடந்த உள்ளூர் டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி கோப்பையில் பரோடா அணியில் இடம்பெற்று விளையாடிய இந்திய முன்னணி ஆல் ரவுண்டராக ஹர்திக் பாண்டியா.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2024
22 Dec 2024 -
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6,675 கோடி நிதியை வழங்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
22 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6,675 கோடி நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.
-
அரசின் பல்வேறு திட்டங்களால் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள் விரைந்து முன்னேறி வருகின்றனர் : தமிழ்நாடு அரசு விளக்கம்
22 Dec 2024சென்னை : ஆதிதிராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டிற்காகப் பல சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.
-
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசு பணி நியமன கடிதங்கள் : பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
22 Dec 2024புதுடெல்லி : மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 71,000க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 23) பணி நியமனக்
-
தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்: மத்திய அரசுக்கு கார்கே கடும் எதிர்ப்பு
22 Dec 2024புதுடெல்லி : சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மே
-
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள் : டெல்லி போலீஸ் விசாரணையில் அம்பலம்
22 Dec 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் தேர்வுக்கு பயந்து பள்ளிகளுக்கு மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
1.05 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு
22 Dec 2024ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
தமிழகத்தில் 6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரம்
22 Dec 2024நெல்லை : தமிழகத்தில் 6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன.
-
தீர்மானங்களின் விவரம்
22 Dec 2024தீர்மானங்களின் விவரம்:
1) அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
-
ஷேக் ஹசீனா ஆட்சியின் போது பலர் காணாமல் போன விவகாரத்தில் இந்தியா மீது வங்கதேசம் குற்றச்சாட்டு
22 Dec 2024வங்காளதேசம் : ஷேக் ஹசீனா ஆட்சியில் பலர் காணாமல் போன விவகாரத்தில் இந்தியா மீது வங்கதேசம் குற்றச்சாட்டியுள்ளது.
-
கிறிஸ்துமஸ் சந்தை விபத்து: ஜெர்மனி அதிபர் பதவி விலக எலான் மஸ்க் வலியுறுத்தல்
22 Dec 2024டெக்ஸ்சாஸ் : ஜெர்மனி அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
-
இந்தியாவின் முடிவுகளை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
22 Dec 2024மகாராஷ்டிரா : இந்தியாவின் முடிவுகளை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம்
22 Dec 2024திருமலை : திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
-
மொஹாலியில் கட்டிடம் இடிந்து 2 பேர் உயிரிழப்பு : சிக்கியவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்
22 Dec 2024மொஹாலி : பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் உட்பட இரண்
-
பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி.: நிர்மலா சீதாராமன் விளக்கம்
22 Dec 2024புதுடெல்லி : பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏன்? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
-
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணி: அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு: பிரேமலதா தகவல்
22 Dec 2024சென்னை : விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
வார விடுமுறை எதிரொலி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
22 Dec 2024குற்றாலம் : வார விடுமுறை காரணமாக நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் நாம் வெற்றி பெறுவோம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தி.மு.க.
-
நெல்லை சம்பவம் எதிரொலி: தமிழகத்தில் அனைத்து கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் : தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
22 Dec 2024சென்னை : நெல்லையில் கோர்ட் அருகே நடந்த படுகொலை சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் அனைத்து கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு டி.ஜி.பி.
-
நாட்டுடைமை ஆக்கப்பட்ட கருணாநிதியின் 179 நூல்கள் - ராஜாத்தி அம்மாளிடம் அரசாணையை வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
22 Dec 2024சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் 7-வது முறை தி.மு.க. ஆட்சி அமைப்பதே நமது இலக்கு : தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் 7-வது முறை தி.மு.க. ஆட்சி அமைப்பதே நமது இலக்கு என்று தி.மு.க.