எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6,675 கோடி நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தி.மு.க. செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (22.12.2024) காலை 10.00 மணி அளவில் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.,
உள்துறை அமைச்சருக்கு கண்டனம்:
வரலாற்றுச் சிறப்பு மிக்க அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களை தரம் தாழ்ந்து, அவதூறாகப் பேசி- அவரது தியாகத்தை இழிவுபடுத்தியிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு இந்த செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இச்செய்தி கிடைத்தவுடன் உணர்ச்சிப் பிழம்பாக பீறிட்டுக் கிளம்பி- மாநிலமெங்கும் அனல் பறக்கும் ஆவேசப் போராட்டத்தை நடத்திய திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள்- அப்போராட்டங்களில் தன்னெழுச்சியாக திரண்ட மக்கள், பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனக் குரல் எழுப்பிய தி.மு.க மற்றும் தோழமைக் கட்சியின் எம்.பி.க்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு:
தமிழ்நாட்டில் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பாதிப்பை ஏற்படுத்திய ஃபெஞ்சல் புயலை நிர்வாக திறமையுடனும், நேரடி கள ஆய்வுகள் மூலமும் மிகக் கவனமாக கையாண்டு- உரிய முன்னெச்சரிக்கை வெள்ள அபாய அறிவிப்புகளை வெளியிட்டு சாத்தனூர் அணையை படிப்படியாகத் திறந்து - மழை - வெள்ளம் மற்றும் அணை நீரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.2000 உதவித் தொகை வழங்கி - பாதிக்கப்பட்ட மக்களின் குரலுக்கு ஓடோடிச் சென்று ஆறுதல் தெரிவித்து, அவர்களோடு இக்கட்டான நிலையில் துணை நின்று - உயிரிழப்பையும், உடைமைகள் இழப்பையும் பெருமளவில் தவிர்த்து - தங்கள் ஒரு மாத ஊதியத்தை பேரிடர் நிதிக்கு அளித்து தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றுவதே தங்களின் தலையாய பணி என்று முன்களவரிசையில் நின்ற சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மக்கள் குறைதீர்க்க களத்தில் நின்ற துணை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், தானே களத்திற்குச் சென்று ஆய்வு செய்து மக்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதல்வர் மற்றும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த செயற்குழு தனது மனமார்ந்த பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
பேரிடர் நிதியை வழங்க வலியுறுத்தல்:
ஃபெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் உட்கட்டமைப்பு மறு சீரமைப்புப் பணிகளுக்கு ரூ.6,675 கோடி ரூபாய் பேரிடர் நிதி கோரி- அதில் அவசரமாக 2000 கோடி ரூபாய் பேரிடர் நிதியை முதல் கட்டமாக அளித்திடும்படி பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து - அதன்பிறகு பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட வந்த மத்தியக் குழுவிடமும் வலியுறுத்தியுள்ள நிலையில் - தமிழ்நாட்டிற்கு ஏற்கெனவே நிலுவையில் இருந்த மாநில பேரிடர் நிதியிலிருந்து 944.80 கோடி ரூபாய் வழக்கமான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளதே தவிர, ஃபெஞ்சல் புயலுக்கு தமிழ்நாடு முதல்வர் கோரியை அவசரத் தொகை ரூ. 2000 கோடியையோ அல்லது நிரந்தர மறுசீரமைப்புக்கான 6675 கோடி ரூபாயையோ இதுவரை மத்திய அரசு ஒதுக்காமல் - தமிழ்நாட்டு மக்களை வஞ்சிப்பதற்கு இந்த செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசு பேரிடர் நிதி என்பது பா.ஜ.க.வின் கட்சி நிதி அல்ல என்பதை மனதில் நிலைநிறுத்தி - இயற்கை சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான மாநில அரசு கேட்கும் பேரிடர் நிதியை விரைவில் மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிட வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்தை கைவிடுக:
“ஒரே நாடு ஒரே தேர்தல்” திட்டத்திற்கு எதிராக சட்ட ஆணையத்தின் முன்பும், இது குறித்து அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உயர்நிலைக்குழு முன்பும் “அரசியல் சட்டத்திற்கு எதிரான” முயற்சி என்று தொடர்ந்து எதிர்த்து வந்துள்ள திராவிட முன்னேற்றக் கழகம்- அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சங்களில் இருந்து பிரிக்க முடியாத ஜனநாயகத்தினை- அந்த ஜனநாயகத்தின் உயிர் மூச்சான நேர்மையான மற்றும் சுதந்திரமான தேர்தலுக்குச் சவால் விடும் வகையில் கொண்டு வரப்படும் “ஒரே நாடு - ஒரே தேர்தல்” மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு பதிவு செய்து - அதற்கு பணிந்து பாராளுமன்ற கூட்டுக்குழுவிற்கு இந்த மசோதாவை மத்திய பா.ஜ.க. அரசு அனுப்பியிருந்தாலும் - ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை திணிக்க அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசாதாவை முழுமையாகக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது.
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக, பாஜகவுக்கு கண்டனம்:
“நான் முதலமைச்சர் பதவியிலிருக்கும் வரை டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு மாநில அரசு அனுமதி அளிக்காது” என்று துணிச்சலாக சட்டமன்றத்தில் அறிவித்தார் நமது முதல்வர். “டங்ஸ்டன் கனிமத்தை ஏலம் விடும் உரிமையை எடுத்துக் கொண்ட மத்திய பா.ஜ.க. அரசும்” “அப்படி பறித்துக் கொள்ள வாக்களித்து தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்த அதிமுகவும்” கைகோத்துக் கொண்டு உருவாக்கிய டங்ஸ்டன் பிரச்சினையை மறைத்து கபட நாடகம் போடும் அதிமுகவிற்கும், மத்திய பா.ஜ.க. அரசுக்கும் இச்செயற்குழு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
கல்வித்துறையில் உரிய நிதி வழங்காத மத்திய அரசுக்கு கண்டனம்:
தமிழ்நாட்டிற்கென சிறப்பான கல்விக் கொள்கை தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஏற்காத காரணத்தால், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்தின் அடிப்படையில் மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய மத்திய அரசின் நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல் வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசை இந்த செயற்குழு கடுமையாகக் கண்டிப்பதுடன், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, மாநில உரிமைகளைக் கல்வித்துறையிலும் பறிக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் எதேச்சாதிகாரப் போக்கிற்கு இந்த செயற்குழு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
“கலைஞர் கைவினைத் திட்டத்தை” தொடங்கி வைத்த திமுக அரசுக்கு பாராட்டு:
சமூக நீதிக்கும், தமிழ் மொழிக்கும் திராவிட மாடல் அரசு தொய்வின்றி தொண்டாற்றி வருகிறது. குலத் தொழிலை ஊக்குவிக்கும் மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றாது என்று கடுமையாக எதிர்த்து பிரதமருக்கும், அந்த துறை சார்ந்த மத்திய அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ள திராவிட மாடல் அரசு, “விஸ்வகர்மா திட்டத்திற்குப் பதில் சாதிய அடிப்படையில் பாகுபாடு காட்டாத அனைத்து கைவினைஞர்களையும் உள்ளடக்கிய ‘கலைஞர் கைவினைத் திட்டத்தை’ தொடங்கி வைத்துள்ளதற்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறது.
மேலும், வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவை” தந்தை பெரியார் முன்னின்று போராடிய வைக்கத்தில் கேரள மாநில முதலமைச்சர் அவர்களுடன் கொண்டாடி - தந்தை பெரியாருக்கு அங்கே “புதுப்பிக்கப்பட்ட நினைவகம், நூலகம், கம்பீரமான சிலை” என முப்பெரும் சாதனைச் சின்னங்களை வைக்கத்தில் நிறுவி - தமிழ்நாட்டின் சமூக நீதிச் சுடரை வைக்கத்திற்குக் கொண்டு சென்று - அங்கே மாபெரும் விழா எடுத்து தந்தை பெரியாரின் புகழ்பாடி - இரு மாநிலங்களுக்கு இடையில் உள்ள முல்லைப் பெரியாறு அணை உள்ளிட்ட நதி நீர் மற்றும் குடிநீர் திட்டங்கள் குறித்தும் ஆக்கப்பூர்வமாக பேச்சுவார்த்தை நடத்தி திரும்பியிருப்பதற்கும் முதல்வருக்கு செயற்குழு தனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறது.
மேலும், தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை முன்னெடுத்து, சமத்துவத்தை நிலைநாட்டுவோம் என இந்த செயற்குழு தீர்மானிக்கிறது. தை முதல் நாளன்று தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளைத் தமிழர் பண்பாட்டுத் திருநாளாக, தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளெங்கும் சமத்துவப் பொங்கல் வைத்து கொண்டாடி, தமிழர் பண்பாட்டிற்குரிய கலை-இசை நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகியவற்றை நடத்தி, தமிழர்களின் தனித்துவத்தை நிலைநாட்டிட வேண்டும் என இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.
200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 இடங்களில் - ஏன் 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற இன்றே புறப்படுவீர். சாதனைகளை போர்ப் பரணி பாடுவீர். கழக ஆட்சி வருங்காலங்களிலும் தொடர்ந்திடும் என்பதை உறுதிசெய்வீர் என்று கழக உடன்பிறப்புகளை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
மீனவர்களை உடனே விடுதலை செய்திடுக:
“இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விடுவித்து - பறிமுதல் செய்த படகுகளையும் திரும்ப ஒப்படைக்க வேண்டும்” என்று முதல்வர் விடுத்த வேண்டுகோளை இச்செயற்குழுவும் வழிமொழிந்து - முதல்வரின் ஆலோசனையை உரிய முறையில் மத்திய அரசு இலங்கை அரசிடம் தெரிவித்து - “இந்தியப் பிரதமர்- இலங்கை அதிபர்” ஆகியோரின் பேச்சுவார்த்தையினை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு ஏதுவாக - தமிழ்நாடு மீனவர்களை, படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் - தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை விரைந்து காணவும், கச்சத்தீவை மீட்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இச்செயற்குழு மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.3 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-12-2024
22 Dec 2024 -
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6,675 கோடி நிதியை வழங்க வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
22 Dec 2024சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.6,675 கோடி நிதியை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.
-
அரசின் பல்வேறு திட்டங்களால் ஆதிதிராவிட-பழங்குடியின மக்கள் விரைந்து முன்னேறி வருகின்றனர் : தமிழ்நாடு அரசு விளக்கம்
22 Dec 2024சென்னை : ஆதிதிராவிடர் பழங்குடியினர் மேம்பாட்டிற்காகப் பல சிறப்புத் திட்டங்களை முதல்வர் மு.க.
-
தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்: மத்திய அரசுக்கு கார்கே கடும் எதிர்ப்பு
22 Dec 2024புதுடெல்லி : சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மே
-
ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு மத்திய அரசு பணி நியமன கடிதங்கள் : பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்
22 Dec 2024புதுடெல்லி : மத்திய அரசு துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 71,000க்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 23) பணி நியமனக்
-
தீர்மானங்களின் விவரம்
22 Dec 2024தீர்மானங்களின் விவரம்:
1) அம்பேத்கரை அவதூறாகப் பேசிய மத்திய மந்திரி அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.
-
பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாணவர்கள் : டெல்லி போலீஸ் விசாரணையில் அம்பலம்
22 Dec 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் தேர்வுக்கு பயந்து பள்ளிகளுக்கு மாணவர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
தமிழகத்தில் 6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக்கழிவுகளை அகற்றும் பணிகள் தீவிரம்
22 Dec 2024நெல்லை : தமிழகத்தில் 6 இடங்களில் கொட்டப்பட்டுள்ள கேரள மருத்துவக் கழிவுகளை அகற்றும் பணிகள் நேற்று தீவிரமாக நடைபெற்றன.
-
கிறிஸ்துமஸ் சந்தை விபத்து: ஜெர்மனி அதிபர் பதவி விலக எலான் மஸ்க் வலியுறுத்தல்
22 Dec 2024டெக்ஸ்சாஸ் : ஜெர்மனி அதிபர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார்.
-
1.05 லட்சம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிப்பு
22 Dec 2024ஆண்டிபட்டி : வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 1,05,002 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தின பேரணி: அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு: பிரேமலதா தகவல்
22 Dec 2024சென்னை : விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு தினப் பேரணிக்கு திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
-
ஷேக் ஹசீனா ஆட்சியின் போது பலர் காணாமல் போன விவகாரத்தில் இந்தியா மீது வங்கதேசம் குற்றச்சாட்டு
22 Dec 2024வங்காளதேசம் : ஷேக் ஹசீனா ஆட்சியில் பலர் காணாமல் போன விவகாரத்தில் இந்தியா மீது வங்கதேசம் குற்றச்சாட்டியுள்ளது.
-
இந்தியாவின் முடிவுகளை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது : மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
22 Dec 2024மகாராஷ்டிரா : இந்தியாவின் முடிவுகளை மறுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி.: நிர்மலா சீதாராமன் விளக்கம்
22 Dec 2024புதுடெல்லி : பாப்கான்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பு ஏன்? என்பது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார்.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் நாம் வெற்றி பெறுவோம் : துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தி.மு.க.
-
நாட்டுடைமை ஆக்கப்பட்ட கருணாநிதியின் 179 நூல்கள் - ராஜாத்தி அம்மாளிடம் அரசாணையை வழங்கிய அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
22 Dec 2024சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 179 நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டதற்கான அரசாணையை அவரின் துணைவியார் ராஜாத்தி அம்மாளிடம், அமைச்சர் மு.பெ சாமிநாதன் வழங்கினார்.
-
வார விடுமுறை எதிரொலி: குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம்
22 Dec 2024குற்றாலம் : வார விடுமுறை காரணமாக நேற்று குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
-
நெல்லை சம்பவம் எதிரொலி: தமிழகத்தில் அனைத்து கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் : தமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு
22 Dec 2024சென்னை : நெல்லையில் கோர்ட் அருகே நடந்த படுகொலை சம்பவத்தை அடுத்து தமிழகத்தில் அனைத்து கோர்ட்டுகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட தமிழ்நாடு டி.ஜி.பி.
-
மொஹாலியில் கட்டிடம் இடிந்து 2 பேர் உயிரிழப்பு : சிக்கியவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்
22 Dec 2024மொஹாலி : பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் உட்பட இரண்
-
திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம்
22 Dec 2024திருமலை : திருப்பதியில் மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட், தங்குமிட ஒதுக்கீடு தேதிகள் மாற்றம் செய்யப்பட்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது
-
விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் வரும் 24, 25-ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
22 Dec 2024சென்னை: வரும் 24, 25-ம் தேதிகளில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் 7-வது முறை தி.மு.க. ஆட்சி அமைப்பதே நமது இலக்கு : தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் 7-வது முறை தி.மு.க. ஆட்சி அமைப்பதே நமது இலக்கு என்று தி.மு.க.
-
ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தல்
22 Dec 2024சென்னை: ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டமன்ற கூட்டத்தை நடத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
-
குவைத்தின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு
22 Dec 2024குவைத் சிட்டி: குவைத் நாட்டின் உயரிய விருதான 'ஆர்டர் ஆப் முபாரக் அல் கபீர் ' பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.
-
எந்த வடிவில் வந்தாலும் எதிரிகளை வீழ்த்தும் ஆற்றல் தி.மு.க.வுக்கு உண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
22 Dec 2024சென்னை: எதிரிகள் எந்த வடிவில் வந்தாலும், அவர்களை வீழ்த்தும் ஆற்றல் கொண்டது தி.மு.க. என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.