முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மொஹாலியில் கட்டிடம் இடிந்து 2 பேர் உயிரிழப்பு : சிக்கியவர்களை மீட்கும் முயற்சி தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      இந்தியா
Acctnet

Source: provided

மொஹாலி : பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) மாலை 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த 20 வயது பெண் உட்பட இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் தியோக்கைச் சேர்ந்த த்ரிஷ்டி வர்மா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே இருந்து நேற்றிரவு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டாலும், படுகாயங்கள் காரணமாக அவர் உயிரிழந்தார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. அவர் பெயர் அபிஷேக் என்றும் ஹரியானா மாநிலம் அம்பாலாவைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது.

இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில், இந்திய ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் 17 மணிநேரங்களுக்கு மேலாக தீவிரமாக முயன்று வருகின்றனர். 60 சதவீத இடிபாடுகள் அகற்றப்பட்டுவிட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டிட விபத்துக் குறித்து மூத்த காவல்துறை அதிகாரி தீபக் பரீக் கூறுகையில், "முதல்கட்ட விசாரணையில், கட்டிடத்தின் உரிமையாளர்கள் எந்த விதமான முன் அனுமதியும் இல்லாமல் அருகில் இருந்த நிலத்தில் குழி தோண்டியுள்ளார். கட்டிட உரிமையாளர்களான பர்விந்தர் சிங் மற்றும் ககன்தீப் சிங் இருவர் மீதும் பாரதீய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவு 105ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து