முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம்: மத்திய அரசுக்கு கார்கே கடும் எதிர்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 டிசம்பர் 2024      இந்தியா
Rahul 2024-12-20

Source: provided

புதுடெல்லி : சில மின்னணு ஆவணங்களை பொதுமக்கள் ஆய்வு செய்வதைத் தடுக்கும் வகையில் தேர்தல் விதியை மாற்றியமைத்திருப்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டை அழிக்கும் மோடி அரசின் திட்டமிட்ட சதியின் ஒரு பகுதி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் மல்லிகார்ஜுன கார்கே ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் நடத்தை விதிகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் துணிச்சலான திருத்தம் என்பது இந்திய தேர்தல் ஆணையத்தின் நிறுவன ஒருமைப்பாட்டை அழிப்பதற்கான மோடி அரசின் மற்றொரு திட்டமிட்ட சதித்தாக்குதலே. முன்பு தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து சுப்ரீம் கோர்ட் நீதிபதியை நீக்கினார்கள். இப்போது உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், தேர்தல் குறித்த தகவல்களைத் தருவதை இறுக்கமாக்குகிறார்கள்.

வாக்காளர்கள் நீக்கம், மின்னணு வாக்கு இயந்திரத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை குறித்து காங்கிரஸ் கட்சி தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய போதெல்லாம், தேர்தல் ஆணையம் அலட்சியமான தொனியில் பதில் அளித்தது, தீவிரமான புகார்களைக்கூட ஏற்கவில்லை.

தேர்தல் ஆணையம் பாதி - நீதித்துறை அமைப்பு என்ற போதிலும், அது சுதந்திரமாக செயல்படவில்லை. தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாட்டின் மீதான மோடி அரசின் கட்டுப்படுத்தப்பட்ட அழிப்பு, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் மீதான முக்கிய தாக்குதலாகும். அவைகளைப் பாதுகாக்க நாங்கள் எல்லா நடவடிக்கைகளையும் எடுப்போம்." இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், மத்திய அரசின் இந்த தேர்தல் நடத்தை விதி திருத்தத்தை காங்கிரஸ் கட்சி சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 4 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து